2 மகள்களை ஆற்றில் வீசிவிட்டு கணவன், மனைவி தற்கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

821

சேலம்..

சேலம் தாதகாப்பட்டியில் வசித்து வருபவர் 42 வயது யுவராஜ். இவரின் மனைவி 35 வயது மான்விழி. இவர்கள் இருவரும் தனியார் டைல்ஸ் நிறுவனத்தில் கூலித்தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்தனர்.

இவர்களுக்கு 7 வயதில் நிதிஷா, 5 வயதில் அக்ஷரா என 2 மகள்கள். பெரியவளான நிதிஷாவுக்கு கடந்த 3 ஆண்டுகளாக சர்க்கரை நோய். இளையவளுக்கு சமீபத்தில் சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

தனது 2 மகள்களுக்கும் தீராத சர்க்கரை நோய் வந்துவிட்டதே என கணவன் மனைவி இருவரும் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்தனர். இதனால் விரக்தியின் எல்லைக்கே சென்றனர்.


கணவன், மனைவி இருவரும் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு எடுத்தனர். இதன்படி மகள்களை கொன்று தற்கொலை குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவராஜ்,

தனது மனைவி மான்விழி மற்றும் 2 மகள்களுடன் இருசக்கர வாகனத்தில் மேட்டூர் அருகே கொளத்தூர் கர்நாடக- தமிழக எல்லையில் உள்ள சின்ன காவல் மாரியம்மன் காவிரி ஆற்றின் நீர்தேக்க பகுதிக்கு சென்றார்.

கனத்த மனதுடன் 2 மகள்களையும் காவிரியில் வீசி கொலை செய்தனர். 2 மகள்களும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்ததை கண்ட கணவன் மனைவி இருவரும் அதன் பிறகு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.