3 வயது சிறுவனுக்கு இளைஞனால் நடந்த கொடூரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

961

நாமக்கல்…

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்து உள்ள சீராப்பள்ளி மூப்பனார் கோயில் தெருவை சேர்ந்தவர் பால முருகன். இவரது மகன் ராகுல் (23). கூலித்தொழில் செய்து வந்த இவருக்கு இன்னும் திருணமாகவில்லை.

மேலும் தனது செல்போனில் ஆ.பா.ச ப.ட.ங்களை பார்த்து வந்துள்ளதால் அவரிடம் யாரும் பேசுவதில்லை. இதனால் மனநலம் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இவரின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த உறவினர் கபில்வாசன். இவரது மனைவி ராஜாமணி (24). இந்த தம்பதிக்கு நவீனா ஸ்ரீ (5) என்ற மகளும், தருண் (3) என்ற மகனும் உள்ளான்.


கபில்வாசன் அப்பகுதியில் உள்ள ஆலையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் கபில்வாசன் வீட்டின் வழியாக ராகுல் சென்ற போது, ராஜாமணி முறைத்து ஏளனமாக பார்த்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரத்தில் இருந்த ராகுல், அன்றைய தினமே இரவு 7 மணியளவில் கபில்வாசனின் மகன் தருண், ராகுலின் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து, சிறுவனை ராகுல் சரமாரி தாக்கியதுடன், சிறுவனின் கழுத்தில் காலால் மிதித்துள்ளான்.

இதனால் சிறுவன் அலறி துடித்துள்ளான். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த ராஜாமணி கூச்சல் போட்டுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ராகுலிடம் இருந்து சிறுவனை மீட்டனர்.

பின்னர் சிறுவனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து ராஜாமணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகுலை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.