மனைவியை துண்டு துண்டாக்கி நதியில் வீசிய கணவன் : சந்தேகத்தால் வந்த வினை!!

438

டெல்லி..

இந்தியாவில் தலைநகர் டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் துண்டுகளாக வெட்டுப்பட்டு நாய்களுக்கு வீசப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதனை தொடர்ந்து அதே பல கொடூரங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங்கில் சிலிகுரி பகுதியில் வசித்து வருபவர் முகமது அன்சாருல். இவரது மனைவி ரேணுகா காத்தூன். இவர்களுக்கு ஒரு மகன். இந்நிலையில் ரேணுகா காத்தூனை டிசம்பர் 24ம் தேதியில் இருந்து காணவில்லை.

அவரிடம் இருந்து ஒரு தகவலும் இல்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் அவருடைய கணவர் முகமது கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.


அவரின் வாக்குமூலம் காவல்துறையையும், பெற்றோர்களையும் அதிர வைத்தது. அதில் அவருக்கு சமீபகாலமாக மனைவி ரேணுகாவின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது. ரேணுகா ப்யூட்டிசியனாக பயிற்சி பெற்று வந்தவர்.

முன்பின் தெரியாத ஆண்களிடம் அவர் பேசியது முகமதுவுக்கு எரிச்சலையும் சந்தேகத்தையும் அதிகப்படுத்தியது. இதனால் டிசம்பர் 24ம் தேதி மனைவியை வீட்டிலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ள பகுதிக்கு அழைத்து சென்று அவரை கொலை செய்தார்.

பின்னர் துண்டு , துண்டுகளாக வெட்டி உடல் பாகங்களை சாக்குப்பையில் போட்டு மகாநந்தா நதியில் வீசிவிட்டார். கணவரின் வாக்குமூலம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மகாநந்தா நதியில் ரேணுகாவின் உடல் பாகங்களை தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில் ரேணுகாவின் சில உடல் பாகங்கள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தலை மற்றும் பிற உறுப்புகளை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஷ்ரத்தா பாணியில் தொடர் கொலைகள் நடந்து வருவது நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.