379 வகை உணவுகளை கண்டு திகைத்து நின்ற மாப்பிள்ளை : புதுமாப்பிள்ளைக்கு மாமியார் வைத்த விருந்து!!

554

ஆந்திர மாநிலம்…

ஆந்திர மாநிலம் எலுரு நகரில் உள்ள ஒரு குடும்பம் மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு மருமகனுக்கு 379 உணவுகள் அடங்கிய விருந்து அளித்து அசத்தியுள்ளது.

மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நரசாபுரத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் கடந்த ஆண்டு சங்கராந்தி பண்டிகையின் போது வருங்கால மருமகனுக்கு 365 வகையான உணவு வகைகளை வழங்கிய நிலையில் தற்போது 379 உணவுகளை வைத்து மாமியார் ஒருவர் விருந்து ஏற்பாடு செய்துள்ளார்.

சங்கராந்தி பண்டிகையின் போது மருமகனை உபசரிப்பது ஆந்திராவில் கடந்த சில ஆண்டுகளாக குடும்பங்களில் ஒரு பழக்கமாகியுள்ள நிலையில், விசாகப்பட்டினம் அருகே உள்ள அனகாபள்ளி நகரைச் சேர்ந்த புத்த முரளிதர், கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த கொருபள்ளி குசுமாவை கடந்த ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி திருமணம் செய்துள்ளார்.


இந்த மருமகனை மகிழ்விக்கவே மாமியார் இப்படியொரு தடபுடலான உணவுகளை சமைத்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக 10 நாட்கள் முன்னமே உணவு பட்டியலை குறித்த மாமியார் தயார் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.