Tuesday, March 10, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
தமிழக மாவட்டம் நாமக்கல்லில் பயிற்சி பெண் மருத்துவர், தனது மடிக்கணினிக்கு சார்ஜ் செய்யும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாமக்கல்லின் கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்தவர் சரணிதா (32). இவர் கோவையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வந்தார். அதேசமயம் M.D மேற்படிப்பு இறுதி ஆண்டை முடித்த சரணிதா, 25 நாட்கள் பயிற்சிக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருந்து வந்தார். திருமணமான சரணிதாவுக்கு 5 வயதில் குழந்தை...
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கார் மோதியதில் தெலுங்கானாவைச் சேர்ந்த பெண் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையைக் கடக்கும் போது வேகமாக வந்த கார் மோதியதில் 25 வயதான குந்திப்பள்ளி சௌமியா சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். அமெரிக்காவில் மேற்படிப்பிற்காக செளமியா சென்றுள்ளார். தற்போது வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சௌமியா இறந்த செய்தி அறிந்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்ததாகவே கூறப்படுகிறது. தற்போது அவரது உடலை...
பீகாரைச் சேர்ந்த IIT பட்டதாரி ஒருவர், ஆண்டுக்கு ரூ 84 லட்சம் சம்பளத்தை உதறிவிட்டு, தற்போது தமது மனைவியுடன் இணைந்து ரூ 170 கோடி மதிப்பிலான நிறுவனத்தை நடத்தி வருகிறார். பீகாரைச் சேர்ந்தவர் அனுரப் சின்ஹா. 8வது வகுப்பில் இருந்தே IIT பட்டப்படிப்புக்கு தயாராகி வந்தவர். 12ம் வகுப்பு முடித்ததும் மும்பை IIT-ல் அவருக்கு வாய்ப்பும் கிடைத்துள்ளது. ஆனால் அவருக்கான கல்லூரி கட்டணம் செலுத்துவதில் அவரது குடும்பம் கடும் போராட்டத்தை எதிர்கொண்டது....
ரூ.99 ஆஃபரில் திருமணத்தை கொண்டாட சென்றிருந்த புதுமண தம்பதியர் குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் உயிரிழந்த சம்பவம் தெரிய வந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு குஜராத், ராஜ்கோட்டில் விளையாட்டு மையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 32 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக தகவல்...
அடுத்த வாரம் திருமணம். பத்திரிக்கை அடித்து ஊரெல்லாம் கொடுத்து, சொந்த பந்தமெல்லாம் வீட்டிற்கும் வர துவங்கி விட்டனர். முகூர்த்தப் புடவை எல்லாம் எடுத்து, மண்டபத்திற்கு அட்வான்ஸ் பணம் கொடுத்து, மகளின் கல்யாணம் குறித்த கனவுகளுடன் இருந்த பெற்றோர், காவல் நிலையத்தில் இருந்து வந்த தகவலால் அதிர்ந்து போனார்கள். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அக்ரஹார தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் அதே பகுதியில் சிப்ஸ் கடை ஒன்றை தனியே நடத்தி வருகிறார்....
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே, மகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்த போது, நீரில் மூழ்கி தந்தை மகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் போகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், தனது மகள் தமிழ்செல்வியையும் (15), அண்ணன் மகள் புவனாவையும் (13) அழைத்துக் கொண்டு, இருவருக்கும் நீச்சல் கற்றுக் கொடுப்பதற்காக வீட்டின் அருகே உள்ள குட்டைக்கு...
இளம் மனைவியை ஆத்திரத்தில் கொலை செய்து விட்டு, கொலையை மறைப்பதற்காக துண்டு துண்டாக்க முயற்சி செய்த கணவன், துண்டாக்க முடியாததால் பதற்றத்தில் போலீசில் சிக்கியுள்ளான். சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களும், பாலியல் தொல்லைகளும் நடைபெறும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தெலுங்கானாவில் அப்படியானதொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலுங்கானா மாநிலம், மெட்சல்-மல்காஜ்கிரி மாவட்டம், பசுபள்ளியில் வசிப்பவர் நாகேந்திர பரத்வாஜா. இவரது மனைவி மதுலதா. தபதி இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு...
காதலித்து, தனிமையில் அவ்வப்போது சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில், கர்ப்பமாக்கிய காதலன், குழந்தைப் பிறந்ததும் திருமணம் செய்து கொள்ள மறுத்து வந்த நிலையில், கைக்குழந்தையுடன் காவல் நிலையத்தின் வாசலில் இளம்பெண் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வலசக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிப்பிரியா (20). ஹரிப்பிரியாவின் தாய் சிறு வயதிலேயே இறந்த நிலையில், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தந்தையும் இறந்துவிட்டார். தனது பெரியப்பா...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் வசித்து வருபவர் 37 வயது ஷனிபா பாபு . இவரது கணவர் சனுஜ் பஷீர் கோயா. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். சனுஜ் பஷீர் கோயா ஐக்கிய அரபு எமிரேட்சில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இதனால் அங்குள்ள புஜைரா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது மனைவி மற்றும் மகள்களுடன் வசித்து வந்தார்.இந்நிலையில் ஷனிபா பாபு, அடுக்குமாடி குடியிருப்பின் 19வது மாடியில்...
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அக்ரஹார தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். இவரது மூத்த மகள் ஜோதிபிரியா (22) தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவரும், மாட்லாம்பட்டியை சேர்ந்த துணி வியாபாரியான செல்வகுமார் (24) என்ற இளைஞரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால், ஜோதிபிரியாவை கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த...