Monday, February 16, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
குஷ்பு...... சிதம்பரத்தில் நடைபெற உள்ள பாஜக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறி சிதம்பரத்தில் இன்று பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், பாஜக ஆர்ப்பாட்டத்திற்கு சிதம்பரம் நகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையில், சிதம்பரம் ஆர்ப்பாட்த்தில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்பு சென்னை முட்டுக்காட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். Arrested.. been taken in...
நாய்............ இணையத்தில் நாய் ஒன்று முககவசம் அணிந்து செல்லும் வீடியோ காட்சி ஒன்று வைரலாகி வருகிறது. ட்விட்டர் பக்கத்தில் டாராக் வார்ட் ஒரு பெண் தனது நாயை வாக்கிங் அழைத்துச் செல்வதைக் கண்டார். நாயை வாக்கிங் கூட்டிப்போவது ஒரு பொதுவான விஷயம்தான். ஆனால், இந்த நாயிடம் ஒரு வித்தியாசம் இருந்தது. இந்த நாய் ஒரு முகக்கவசத்தையும் (Facemask) அணிந்திருந்தது. இதைக்கண்ட பலரும் முககவசம் எவ்வளவு முக்கியமான ஒன்று என்று உங்கள் விழிப்புணர்வு அருமையான விஷயம்...
நாகப்பாம்பு........ கோழிக்கூட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பு அங்கிருந்த 4 நாட்டுக் கோழிக்குஞ்சுகளை விழுங்கிய நிலையில், வீட்டின் உரிமையாளருக்குப் பேரதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. தேனி அருகே அல்லிநகரம் காவல் நிலையத்துக்குப் பின்புறம் வசித்து வருபவர் செல்வம். இவர் தனது வீட்டில் 30க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறார். சமீப காலமாக இவருடைய வீட்டில் வளர்த்து வரும் கோழிக்குஞ்சுகள் மாயமாகி வந்தன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 15க்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் மாயமாகின. அக்கம் பக்கத்தில் தேடியும் கோழிக்குஞ்சுகளைக்...
மொபைல் செயலி.. தொடர்புத் தடமறிதலுக்காகவும், கொரோனா வைரஸ் அதிக ஆபத்துள்ள பகுதிகளின் பயனர்களை எச்சரிக்கவும் மொபைல் அடிப்படையிலான App ஒன்று உருவாக்கப்படவுள்ளது. கொரோனா தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். இந்த Appஇல் பல அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என அவர் கூறியுள்ளார். அதிக ஆபத்துள்ள பகுதிகள் குறித்து பயனர்களை எச்சரிக்க இந்த App உதவும் என்று...
மும்பையில்.................. மும்பையில் ஆன்லைன் வகுப்பில் பதிலளிக்காத 12 வயது மகளை, ஆத்திரத்தில் பென்சிலால் குத்தியும், பல இடங்களில் கடித்தும் கண்டித்த தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணங்களால் இந்தியாவில் பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், சில மாநிலங்களில் மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஆன்லைன் வகுப்புகள் மூலம் வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் பயின்று வருகின்றனர். எப்போதும் போனும் கையுமாக இருப்பவர்கள் கூட, ஆன்லைன் வகுப்பை நினைத்தாலே...
இந்தியா........ இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் தனது மகளை கொன்றுவிட்டு, தன் தொழில் போட்டியாளர்கள்தான் அவளை கொன்றதாக நாடகம் ஆடிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் காவல்துறையினரை ஏமாற்றுவதற்காக, அவர் ஆரம்பத்தில் தனது மகளை கொலை செய்ததாக முன்று பேர் மீது குற்றம் சாட்டியிருந்தார். இதன் அடிப்படையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர். இந்த வழக்கில் புகார் அளித்தவர் இறந்த சிறுமியின் தந்தை அஜய் காதிக். இப்புகாரில் அச்சிறுமியை ஈவ்டீசிங் செய்து...
தமிழகத்தில்.......... தமிழகத்தில் பொலிசார் தாக்கியதில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவத்தில், பல கொடூர விஷயங்கள் நடந்துள்ளது, சிபிஐ எப்.ஐ.ஆரில் அம்பலமாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவருக்கு பென்னிக்ஸ் என்ற 31 வயது மகன் உள்ளார். பென்னிக்ஸ் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 20-ஆம் திகதி ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தது தொடர்பாக பொலிசார் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜையும்...
இந்தியா........ இந்தியாவில் திருமணமான 28 வயது நர்ஸ் தற்கொலை செய்த சம்பவத்தில் புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தின் சூரத்தை சேர்ந்தவர் மேகா ஆச்சார்யா (28). திருமணமான இவர் அங்குள்ள சிவில் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்தார், மேகாவின் கணவர் வேறு ஊரில் தங்கி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மேகா அதிகாலையில் தனது வீட்டில் துப்பாட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்தார். மேகா பணிபுரியும் மருத்துவமனையின் மருத்துவர்கள், தலைமை...
இந்தியாவில்… இந்தியாவில் பணத்திற்காக இரண்டு மனைவிகளுடன் ஒன்றாக இருப்பதை வைத்து பணம் சம்பாதித்த கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். மத்தியப்பிரதேசத்தின் Vidisha பகுதியில் 24 வயது மதிக்கத்தக்க நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்தனர். அவர் இரண்டு மனைவிகளிடம் ஒன்றாக இருப்பதை ஆப்களில் நேரலையாக பதிவிட்டு, அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்துள்ளார் என்பது தெரியவந்ததையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், Charanjeet என்று அறியப்படும்,...
இன்றைய ராசிபலன்........... மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் உங்களுடைய பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான புதிய நபர்களின் அறிமுகம் முன்னேற்ற பாதையில் செல்ல துணைபுரியும். பெண்களுக்கு மன வலிமை அதிகரிக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. விநாயகரை வழிபட நல்லது நடக்கும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த ஒரு முடிவையும் சிந்தித்து செயல்படுத்துவது...