
லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள நகல்ஸ் பகுதியில் அமைந்துள்ள சேர எல்ல எனும் இடத்தில் புகைப்படம் எடுக்கச் சென்ற (wedding pre-shoot) திருமணமாகவிருந்த ஜோடி ஒன்று தவறி விழுந்ததில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.

யுவதியை அங்கிருந்தவர்கள் காப்பற்றியுள்ளதாக லக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருணாகல் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிந்துள்ளான். எதிர்வரும் மாதம் திருமணம் புரியவுள்ள இவர்கள், தமது பெற்றோருடன், குருணாகல் பிரதேசத்திலிருந்து லக்கல ரிவஸ்டன், நக்கிள்ஸ் போன்ற பிரதேசங்களில் புகைப்படம் எடுப்பதற்காக வந்திருந்தனர்.

ரிவஸ்டன் பிரதேசத்திலிருந்து 12 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள இலுக்குபுர, சேர எல்ல நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுக்க இவர்கள் முயற்சித்துக்கொண்டிருந்த வேளையில், திடீரென்று குறித்த இளைஞரும் யுவதியும் நீரில் வழுக்கி வீழ்ந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த யுவதி அங்கு வந்தவர்களினால் காப்பாற்றப்பட்டுள்ளார்.















