அரசு பள்ளியில் சேர்க்காததால் 12ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு!!

2435

தமிழகத்தில்..

வெள்ளகோவில் அருகே கரட்டுப்பாளையத்தில் வசிப்பவர் சிவகுமார். இவரது மனைவி வளர்மதி. சுமைதூக்கும் தொழிலாளியாக வேலைப் பார்த்து வரும் இவரது மகள் சத்தியா (17) தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.

சத்யாவின் தோழிகள் அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள். எனவே தன்னையும் அரசு பள்ளியில் சேர்த்து விடுமாறு பெற்றோரிடம் சத்யா கேட்டுக் கொண்டிருந்தார். இதற்கு பெற்றோர்கள் மறுத்த நிலையில், மன உளைச்சலில் இருந்த சத்தியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டார்.

வேலை முடிந்து வந்த பெற்றோர் மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வெள்ளகோவில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜமூர்த்தி மற்றும் போலீசார்,


சத்தியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சத்தியா தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.