அழுகிய நிலையில் கிடந்த கர்ப்பிணி பெண் : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!

623

கோயம்புத்தூர்..

இந்தியாவில் கர்ப்பிணி ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் செல்லும் பைபாஸ் சாலையோரம் இருக்கும் முட்புதரில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனால் பொதுமக்கள் அங்கு சென்று பார்த்த போது அழுகிய நிலையில் கர்ப்பிணி பெண்ணின் சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.


அந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் அதிகாரிகள் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸ் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் திருச்சி பகுதியில் உள்ள சிக்னல்களில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.

மேலும் அந்தப் பெண் 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இதனையடுத்து பாலியல் பலாத்காரம் செய்யும் முயற்சியில் யாராவது கொலை செய்து பெண்ணின் சடலத்தை முட்புதரில் வீசி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.