ஆகஸ்ட் மாதம் முதல் சுற்றுலாப்பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு!!

1878

எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு வரவழைக்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் சுற்றுலாப்பயணிகள் ஆகக்குறைந்தது 5 இரவுகள் தங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுற்றுலா அதிகார சபை தெரிவித்துள்ளது

முன்கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சுகாதார ஓழுங்கு விதிகளின் கீழ் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு அழைக்கப்படவுளதாக இலங்கை சுற்றுலா சபை தெரிவித்துள்ளது.

இதன்போது எந்த நாட்டில் இருந்தும் அனைத்து வயது பிரிவினரும் இலங்கைக்கு வந்துச்செல்லும் வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன்படி ஆகஸ்ட் முதல் திகதி முதல் கட்டுநாயக்க, மத்தளை மற்றும் ரத்மலானை விமான நிலையங்களின் ஊடாக சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குள் அழைத்துவரப்படுவர் என்றும் சுற்றுலா சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வீசா விண்ணப்பங்களை பின்வரும் இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.