இந்தியா…..

இந்தியாவின் கேரள மாநிலத்தில் கடற்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்திய கடற்படையின் கிளைடர் விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை கொச்சி கடற்படை விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது.

வழக்கமான பயிற்சியின் போது விமானம் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

பயிற்சியில் ஈடுபட்ட லெப்டினன்ட் ராஜீவ் ஜா (39) மற்றும் சுனில் குமார் (29) ஆகியோர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

விரிவான விசாரணையின் பின்னரே விபத்துக்கான காரணத்தை அறிய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.















