பீகார்..

பீகார் மாநிலம் கயா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ரிஷப். இவர் ஜே.இ.இ தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்த நிலையில், இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலம் மைனர் சிறுமி ஒருவரிடம் பேசி வந்துள்ளார்.

அந்த சிறுமி கடந்த ஜூன் 26ஆம் தேதி ரிஷப்பிடம் தன்னை நேரில் வந்து சந்திக்குமாறு அழைத்துள்ளார்.

சிறுமியின் அழைப்பை ஏற்று ரிஷப் தனது நண்பருடன் ஜூன் 30ஆம் தேதி அன்று சிறுமியை பார்க்க பாட்னாவுக்கு பைக்கில் சென்றுள்ளார்.

அடுத்த நாள் ஜூலை 1ஆம் தேதி இருவரும் அங்கு சிறுமியை சந்தித் நிலையில், தனது நண்பரை மட்டும் திரும்பிப் போகச் சொல்லி அனுப்பிவைத்தார்.

நண்பர் ஊர் திரும்பியதும் தான் சிறுமியின் பலே சதித்திட்டம் அம்பலமானது. தன்னை ஆசை ஆசையாக பார்க்க வந்த இளைஞர் ரிஷப்பை அந்த சிறுமி மூன்று இளைஞர்களை வைத்து கடத்தி சென்றுள்ளார்.















