இளம் வயது மகள் மீது கோடாரியால் ஆத்திரத்தை தீர்த்த தந்தை: வெளியான பகீர் பின்னணி!!

569

பாகிஸ்தான்…

பாகிஸ்தான் நாட்டில் உறவினரை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததால் தந்தையால் இளம் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பைசலாபாத் நகரில் செப்டம்பர் 27 ஆம் திகதி குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

இளம்பெண்ணின் மாமாவின் மகனை திருமணம் செய்து கொள்ள தந்தை விரும்பியதாக பொலிசார் தெரிவித்தனர், ஆனால் குறித்த பெண் அவரை திருமணம் செய்ய விரும்பவில்லை என உள்ளூர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பலமுறை இந்த விவகாரம் தொடர்பில் தந்தைக்கும் மகளுக்கு இடையே வாக்குவாதம் நடந்து வந்துள்ளது.


ஆனால் இந்த முறை அந்த தந்தை தமது மகளை கோடாரியால் தாக்கியுள்ளார். சம்பவத்தின் போது உடனிருந்த தாய்மாமாவும் காயம் பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

தகவல் அறிந்து விரைந்து சென்ற மருத்துவ உதவிக்குழுவினர் மற்றும் பொலிசார், ரத்தவெள்ளத்தில் கிடந்த இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.

ஆனால் செல்லும் வழியில் அவர் மரணமடைந்துள்ளதாக பரிசோதனைக்கு பின்னர் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இதற்கிடையில், பொலிசார் சந்தேக நபரை கைது செய்து வழக்கு தொடர்பான விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.