இளம்பெண் ஓட ஓட குத்திக் கொலை : குழந்தைகள் கண்முன்னே நடந்த கொடூரம்!!

1207

டெல்லி..

டெல்லியில் துரத்தி சென்று பிள்ளைகள் கண்முன்னே பெண் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.

கடந்த 21ஆம் தேதி தென்மேற்கு டெல்லியின் சாகர்பூர் பகுதியில் இளம்பெண்ணை ஒருவன் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றதாக போலீசுக்கு தகவல் வந்தது.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் மயங்கியிருந்த பெண்ணை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் அப்பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரியபடுத்தினர்.


உடனே பெண்ணின் உடலை மாவட்ட அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்த போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், சரியாக மதியம் 2.10 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் கத்தியுடன் துரத்துவதும், அவரிடம் இருந்து தப்பிக்க அந்த பெண் தனது இரு பிள்ளைகளுடன் ஓடி வருவதும் பதிவாகியிருந்தது.

இதனிடையே போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த பெண்ணின் பெயர் ஆரத்தி என்றும் அவர் தனது பிள்ளைகளை கூட்டிக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே வந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து, அந்த சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் குழந்தைகள் கண்முன்னே தாயை குத்தி கொலை செய்த கொடூரனின் செயல் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.