உங்க கிட்ட தனியா பேசணும்.. காட்டுப்பகுதிக்கு கூட்டி சென்று கதையை முடிக்க மனைவி போட்ட திட்டம்!!

20215

சேலத்தில்..

சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் கார்த்திக் (31). இவரது மனைவி பிரியா (25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரியாவின் தங்கை வீடு கோவை மாவட்டம் கஞ்சிகோணம்பாளைத்தில் உள்ளது.

இங்கு அவர் அடிக்கடி வந்து சென்ற போது பிரியாவுக்கு திருச்செங்கோட்டை சேர்ந்த டிரைவர் தினேஷ் (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

நாளடைவில் இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனால், கோபித்துக்கொண்டு பிரியா 2 குழந்தைகளுடன் தங்கையின் வீட்டிற்கு வந்தார். இதனால், பிரியாவுக்கு தினேசுடன் உல்லாசமாக இருக்க ரொம்ப வசதியாக போனது.


இந்த தகவல் கார்த்திக்கிற்கு தெரிய வந்ததை அடுத்து அவர் தனது மனைவியை தொடர்பு கொண்டு நடந்தவற்றை மறந்து விட்டு ஒன்றாக வாழலாம் என கூறியுள்ளார்.

இதுகுறித்து பிரியா தனது கள்ளக்காதலன் தினேஷிடம் கூறினார். உன்னுடைய கணவர் உயிரோடு இருக்கும் வரை நான் இருவரும் ஒன்றாக வாழவிடமாட்டார். ஆகையால், அவரை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டனர்.

அதன்படி தனது கணவர் கார்த்திக்கை தொடர்பு கொண்ட மனைவி பிரியா உங்களிடம் பேச வேண்டும் என கோவைக்கு அழைத்தார். இதனையடுத்து, கோவைக்கு வந்த கணவரை பிரியா காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார்.

அப்போது, அங்கு கத்தியுடன் மறைந்திருந்த தினேஷ் கார்த்திக்கை கத்தியால் குத்த முயன்ற போது கையால் தடுத்துள்ளார். இதனால், அவரது கையில் கத்திக்குத்து விழுந்தது. வலிதாங்க முடியாமல் அலறி கூச்சலிட்டுள்ளார்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வருவதை பார்த்த தினேசும், பிரியாவும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கார்த்திக் அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய முயன்ற பிரியா, அவரது கள்ளக்காதலன் தினேஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.