
தெலுங்கானா மாநிலம் நாராயண பேட்டை பகுதியை சேர்ந்தவர் அஞ்சலிப்பா. இவர் கூலி வேலை பார்த்து வந்த நிலையில் பக்கத்துக்கு ஊரை சேர்ந்த ராதா என்பவரை சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அஞ்சலிப்பா ராதா தம்பதிக்கு ஒரு ஆண் ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர், ராதா வேலைக்கு எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்து குழந்தைகளை பார்த்துக் கொண்டுள்ளார்.
எனவே அஞ்சலிப்பா கூலி தொழில் செய்து வரும் பணத்தில் தான் குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர்.
அதனால் காலை வேலைக்கு செல்லும் அஞ்சலிப்பா இரண்டு இடங்களில் வேலை செய்துவிட்டு இரவு 10 மணிக்கு மேல் தான் வீட்டிற்கு சென்றதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ராதாவிற்கு அதே ஊரை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் காலப்போக்கில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. அஞ்சலிப்பா வேலைக்கு சென்றதும் ராதா வீட்டில் அந்த இளைஞனுடன் தனிமையில் இருந்து வந்துள்ளார்.
வழக்கம் போல் வேலைக்கு சென்ற அஞ்சலிப்பா ஒரு வேலை இல்லாததால் உடனே வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளார்.
அப்போது அஞ்சலிப்பா அந்த இளைஞனுடன் ராதா தனிமையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். குழந்தைகளின் வருங்காலத்தை நினைத்து ராதாவை கண்டித்து இனிமேல் இது போல செய்ய வேண்டாம் என அறிவுரை கூறியுள்ளார்.
ஆனால் இதை பொருட்படுத்தாத ராதா காதலனுடன் வாழ முடிவு செய்து அஞ்சலிப்பாவை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.
அஞ்சலிப்பாவிற்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ராதா இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த அஞ்சலிப்பாவிற்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார்.
அதை உண்டு மயக்கமான தனது கணவரை ராதா கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் விடியும் வரை காத்திருந்து விடிந்த பின் அக்கம் பக்கத்தினரிடம் சென்று அழுது நடித்த ராதா
“என் புருஷன் எழுப்பினால் எழவில்லை உடம்பு வேற ஜில்லுனு இருக்கு பயமா இருக்கு” என கூறியுள்ளார். இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸிற்கு போன் செய்துள்ளனர்.
பின்னர் அஞ்சலிப்பாவை பரிசோதித்த செவிலியர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அஞ்சலிப்பாவின் கழுத்தில் வளையல் துண்டுகள் இருப்பதை கவனித்த செவிலியர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் என்ன நடந்தது என்று ராதாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது தனது கணவர் குடிபோதையில் மூச்சு திணறி இறந்துவிட்டதாக பதிலளித்த ராதா போலீசாரின் அடுத்தடுத்து கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் தவித்துள்ளார்.
இதற்கிடையே வெளிவந்த பிரேத பரிசோதனை முடிவில் அஞ்சலிப்பா இயற்கையாக இறக்கவில்லை யாரோ கொலை செய்துள்ளது தெரிவந்துள்ளது. பின்னர் ராதாவிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர் தனது கணவரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் ராதாவை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மனைவியே கணவனை கொலை செய்து நாடகமாடியது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.















