தமிழகத்தில்..

விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் விசாலாட்சி (38). இவர் தனது கணவர் முருகனுடன் வசித்து வந்துள்ளார். ஆனால் மேட்டுத்தெருவைச் சேர்ந்த ஏ.முருகன் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் விசாலாட்சி இருந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 19ஆம் திகதி ஏ.முருகனை சந்திக்க விசாலாட்சி சென்றுள்ளார். அங்கு இருவரும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஏ.முருகன் திடீரென விசாலாட்சி கையில் வைத்திருந்த மண்ணெண்யை பறித்து அவர் மீது ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

தீப்பற்றியதால் வலியால் அலறித் துடித்த விசாலாட்சியை பொதுமக்கள் காப்பாற்ற முயன்றுள்ளனர். உடனடியாக அவர் புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி துரதிர்ஷ்டவசமாக விசாலாட்சி உயிரிழந்தார்.

முதற்கட்ட விசாரணையில் மூன்று ஆண்டுகால பழக்கத்தை திடீரென முறித்துக் கொண்டதால் ஏ.முருகன் அவரை கொலை செய்துள்ளதாக தெரிய வந்தது. விசாலாட்சி அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏ.முருகன் மீது கொலை வழக்குப்பதிவு செய்த பொலிஸார் அவரை கைது செய்தனர்.















