உல்லாசமாக வாழ ஆசைப்பட்ட பெண் பிரபலத்திற்கு பொதுவெளியில் நடந்த பரிதாபம்!!

495

சென்னையில்..

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ளது பெருங்களத்தூர். இங்கு புத்தர் நகரில் வசித்து வருபவர் சபாபதி. இவரது மனைவி பெயர் மாலதி. 2 பேருமே தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.. கடந்த வாரம் தம்பதி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தனர்.

மாலதி மட்டும் வீட்டுக்கு திரும்பிவந்தார். அப்போது, வீட்டில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ந்தார். ஆனால் வீட்டின் பூட்டு உடைக்கப்படவில்லை.

இதனால் குழப்பமடைந்தார்.. பிறகுதான் தெரிந்தது, இவர்கள் எப்போது வீட்டை பூட்டைவிட்டு, வெளியே சென்றாலும், வாசற்படியிலேயே ஒரு இடத்தில், சாவியை மறைவாக வைத்து விட்டு, போவார்களாம்.


இந்த தம்பதி இப்படி சாவியை வைப்பதை யாரோ, நோட்டமிட்டு, இப்படி கைவரிசையை காட்டி இருப்பது தெரியவந்தது.. இதையடுத்து, உடனடியாக பீர்க்கன்காரணை போலீசில் புகார் தரப்பட்டது.

போலீசாரும் கொள்ளை நடந்த வீட்டின் அருகே உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் ஒரு இளம்பெண்ணின் உருவம் பதிவாகி இருந்தது. அவர் ஜீன்ஸ் பேண்ட், டி-சர்ட் அணிந்திருந்தார். ஒரு டூவீலரில் வருகிறார். ஆனால், அந்த டூவீலருக்கு நம்பர் பிளேட் இல்லை.

இதனால், அந்த பெண் குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். பெண்ணின் அடையாளம், வண்டியின் அடையாளம் எதுவுமே தெரியாததால், அந்த பகுதியில் உள்ள மொத்தம் 47 சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.

அப்போதுதான், அவர் பெயர் அமீஷா குமாரி என்பதும், அவர் ஒரு ரீல்ஸ் பிரபலம் என்பதும் தெரியவந்தது. அமீஷாவுக்கு 33 வயதாகிறது.. மண்ணிவாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். சோஷியல் மீடியாவில் இவரது ரீல்ஸ் வீடியோக்களுக்கு நிறைய ஃபாலோயர்ஸ்கள் உண்டு.

இதையடுத்து, அமீஷா குமாரியின் வீட்டுக்கு போலீசார் சென்றனர். போலீசார் உள்ளே நுழையும்போது, சோஷியல்மீடியாவில் பதிவிடுவதற்காக, அமீஷா ரீல்ஸ் வீடியோ ரிக்கார்டிங் செய்து கொண்டிருந்தார். போலீசாரை பார்த்ததுமே அதிர்ந்துபோனார் அமீஷா.

நகை திருட்டு சம்பந்தமாக விசாரிக்க வேண்டும் என்று போலீசார் சொன்னதுமே, அமீஷா குமாரி ஆவேசம் அடைந்தார். என்னை பத்தி என்ன நினைச்சிட்டு இருக்கீங்க. நான் திருடினேனா? இங்க பாருங்க, சோஷியல் மீடியாவில் ரீல்ஸ் செய்து, மாதம் ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் சம்பாதிக்கிறேன். எனக்கு திருட வேண்டிய அவசியம் கிடையாது” என்று போலீசாரிடம் சீறினார்..

இதனால் விசாரணைக்கு சென்ற போலீசார் ஒரு நிமிடம் திகைத்தனர். “ஒருவேளை நாமதான் தவறாக அந்த பெண்ணை சந்தேகப்பட்டு விட்டோமோ?” என்று யோசித்து குழம்பி நின்றனர்.

இருந்தாலும் சிசிடிவி கேமரா பொய் சொல்லாதே என்ற அசாத்திய நம்பிக்கையில், அந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த எல்லா காட்சிகளையும் அமீஷா குமாரியிடம் கொண்டுவந்து போலீசார் காட்டினார்கள்..

அதற்கு பிறகு அமீஷா குமாரி, “கப்சிப்” மோடுக்கு போய்விட்டார்.. போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை ஆரம்பிக்கவும், வீடு புகுந்து நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டார். பின்னர் அமீஷா குமாரியை போலீசார் “ஆன் தி ஸ்பாட்டிலேயே” கைது செய்தனர்.

திருடிய நகைகளை எல்லாம் கொண்டுபோய், வீட்டில் இருந்த ஃபிரிட்ஜ்ஜூக்குள் மறைத்து வைத்திருந்தார்.. அவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.. ஆனால், அந்த வீட்டில் திருடிய பணம் எங்கே? என்று கேட்டனர்..