சென்னை..

சென்னை அருகே எலி மருந்து கலந்த உணவை சாப்பிட்டு பெண் எஞ்சினியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் லாரன்ஸ். இவருடைய மகள் சில்வன மேரி (23). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், சென்னையில் உள்ள ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

மேரியின் வீட்டில் எலித்தொல்லை இருந்ததால் அவைகளை கொள்வதற்காக எலி மருந்தை வாங்கிவந்து உணவில் கலந்து வைத்துள்ளனர். இது தெரியாமல் சில்வன மேரி அந்த உணவை எடுத்து சாப்பிட்டுள்ளார்.

வாந்தி, மயக்கம் என உடல்நலம் மோசமான மேரியை பாடியநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

ஆனால், நேற்று சில்வன மேரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக செங்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.















