எவ்ளோ சொல்லியும் கேட்காமல் மனைவியுடன் கள்ள உறவு.. நண்பனை திட்டமிட்டு கணவன் செய்த கொடூரம்!!

943

திருவள்ளூரில்..

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பெருமாள்அடி பாதம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (24). பைக் மெக்கானிக், வாகனங்களுக்கு பஞ்சர் போடும் வேலை செய்து வந்த வெங்கடேசன் சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

அண்மையில் திருட்டு, வழிப்பறி வழக்குகளில் கைதான வெங்கடேசன், குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு கடந்த 20 நாட்களுக்கு முன் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

தமது நண்பரான நரேஷ்குமாரின் மனைவியோடு வெங்கடேசன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த நரேஷ்குமார் வெங்கடேசனை எச்சரித்துள்ளார்.

நரேஷ்குமாரின் வீட்டின் அருகே உள்ள டீ கடைக்கு வெங்கடேசன் செல்லும் போது அவரை அங்கு வரக்கூடாது என பல முறை நரேஷ்குமார் எச்சரித்து விரட்டியுள்ளார். நேற்று முன்தினம் இரவு வெங்கடேசன் தமது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு வீடு திரும்பியுள்ளார்.


வீட்டிற்கு வந்த பிறகு வெங்கடேசன் தமது மற்றொரு நண்பரான சரண் என்பவருக்கு போன் செய்து குடிப்பதற்கு சரக்கு உள்ளதா என கேட்டுள்ளார். ஆனால் எதிர் திசையில் சரணுக்கு பதிலாக அவரது போனை நரேஷ்குமார் எடுத்து வெங்கடேசனுடன் சண்டை போட்டுள்ளார்.

அடிக்கடி எனது வீட்டின் அருகே சுற்றிக்கொண்டுள்ளாயே நேரில் வா, நீயா, நானா என பார்த்து விடலாம் என நரேஷ்குமார் போனில் வெங்கடேசனுக்கு சவால் விடுத்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் போனில் வெங்கடேசனை தொடர்பு கொண்ட நரேஷ்குமார் பயந்து விட்டாயா என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் அங்கேயே இரு, வருகிறேன் என கூறி சென்றுள்ளார்.

வீட்டில் இருந்தவர்கள் தடுத்த நிலையில், அதனை மீறி சுவர் ஏறி குதித்து வெங்கடேசன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். மேலும் கத்தியை எடுத்து இடுப்பில் மறைத்து வைத்து வெங்கடேசன் சென்றதை பார்த்த அவரது தம்பி,

சிவா அண்ணன் தனியாக சண்டைக்கு செல்வதால் அவரை பாதுகாப்பதற்காக பின் தொடர்ந்து சென்றுள்ளார். நரேஷ்குமார் கூறிய இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு யாரும் இல்லாததால் மீண்டும் வெங்கடேசன், நரேஷ்குமாருக்கு போன் செய்து கேட்டுள்ளார்.

அப்போது நரேஷ்குமார் இரு வருகிறேன் என கூறி தமது மனைவியின் தம்பிகளான தினேஷ், லோகேஷ் ஆகிய இருவருடன் சென்றுள்ளார். வெங்கடேசன் முதலில் நரேஷ்குமாரை கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து வீடு நோக்கி வந்துள்ளார்.

சிறிது நேரத்தில் வெங்கடேசனை சுற்றி வளைத்த நரேஷ்குமார் உள்ளிட்ட மூவர் வெங்கடேசன் கொண்டு வந்த கத்தியை பிடுங்கி அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் வெங்கடேசன் சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் வெங்கடேசனின் பாதுகாப்பிற்காக வந்த அவரது தம்பி சிவாவையும் வெட்டியுள்ளார். இதில் சிவாவிற்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த சோழவரம் காவல்துறையினர், வெங்கடேசனின் நண்பர்களான நரேஷ்குமார் (23), தினேஷ் (19), லோகேஷ் (20) ஆகிய மூவரை கைது செய்தனர்.