ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்களை மணந்து கொண்ட 2 சகோதரிகள்! பின்னர் நடந்த விபரீத சம்பவம்!!

905

இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சகோதரர்களை 2 சகோதரிகள் திருமணம் செய்து கொண்ட நிலையில் அதில் ஒரு பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் பிரேம்சந்த். இவர் மனைவி ரஜ்னி இரு தினங்களுக்கு முன்னர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

ரஜ்னி தற்கொலை செய்து கொண்டதாக கணவர் மற்றும் குடும்பத்தார் கூறிய நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என அவரின் சகோதரி மம்தா பரபரப்பு புகாரை பொலிசில் அளித்துள்ளார்.

அதில், பிரேம்சந்துக்கும், ரஜ்னிக்கும் கடந்த 2011ல் திருமணம் நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிரேம்சந்தின் சகோதரர் பங்கஜுக்கும் எனக்கும் 2017ல் திருமணம் நடந்தது.

ஏற்கனவே ரஜ்னியை கூடுதல் வரதட்சணை கேட்டு குடும்பத்தார் கொடுமைப்படுத்தி வந்தனர். இதையடுத்து என்னையும் அதே போல துன்புறுத்தினார்கள்.


நான் கூட ஒருமுறை அவர்களின் கொடுமை தாங்காமல் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டேன். இதையடுத்து சில காலமாக என் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தேன்.

இந்த சமயத்தில் ரஜ்னி மர்மமாக இறந்துள்ளார், அவர் கழுத்து உடல் பகுதியில் காயங்கள் உள்ளது. இதனால் என் மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்பத்தார் தான் என் சகோதரி ரஜ்னியை கொலை செய்துள்ளனர் என கூறியுள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிசார் பிரேம்சந்த், பங்கஜ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.