ஒரே வீட்டில் பிணமாக கிடந்த 3 சகோதரிகள்… தெருவெங்கும் வீசிய துர்நாற்றம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

558

தும்கூரில்..

தும்கூரில் பெற்றோருடன் வசித்து வந்த பிந்து, ரஞ்சிதா மற்றும் சந்தனா ஆகிய மூன்று சகோதரிகளும் தங்களுடைய 10 வயதில் பெற்றோர்களை இழந்துள்ளனர் இந்த சகோதரிகளை அவர்களது பாட்டி தான் வளர்த்து வந்துள்ளார்.

இதில் இரண்டு சகோதரிகளுக்கு பாட்டி எப்படியோ திருமணமும் செய்து வைத்து இருக்கின்றார். இந்த நிலையில், கடந்த 21 நாட்களுக்கு முன்பாக அவர்களை வளர்த்து வந்த பாட்டி உயிரிழந்துள்ளார்.

இதனால், சகோதரிகள் அனைவரும் மிகுந்த சோகத்தில் இருந்து வந்தனர். தங்களுக்கென்று இருந்து வந்த கடைசி உறவும் போய்விட்டது என்று மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளனர்.


இனி, நமக்கு யாரும் இல்லை பாட்டி அனாதையாக விட்டுச் சென்று விட்டார் என்று நினைத்த சகோதரிகள் அவர்கள் வசித்து வந்த வீட்டில் தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றனர்.

அந்த வீடு நீண்ட நாட்களாக மூடியே இருந்துள்ளது. மூடி இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது மூன்று சகோதரிகளும் பிணமாக கிடந்துள்ளனர்.

அவர்கள் இறந்து 9 நாட்களுக்குப் பின் இந்த சம்பவம் வெளியில் தெரியவந்துள்ளது. இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.