கணவனுடன் அடிக்கடி தகராறு… ஆத்திரமடைந்த மனைவி செய்த காரியம் : கதறி அழுத குடும்பம்!!

552

ராணிப்பேட்டையில்..

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் பகுதியை சேர்ந்த தம்பதியர்கள் கார்த்தி (36), செல்வராணி (33) ஆகிய இருவருக்கும் ஒரு மகன் மற்றும் மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில், கார்த்திக் கட்டிட கூலி தொழில் செய்து வரும் நிலையில், மனைவி செல்வராணியிடம் அவ்வப்போது கருத்து வேறுபாடு காரணமாகவும், தொடர்ந்து குடும்பத்தில் தகராறு நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வழக்கம்போல நேற்று இரவு கார்த்திக் மற்றும் அவரது மனைவி செல்வராணி ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடுமையான முறையில் வாக்குவாதம் நடைபெற்றதாகவும், ஒரு கட்டத்தில் அது கைகலப்பாக மாறி இருவருக்கும் சண்டை முற்றியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்து போன செல்வராணி அருகே உள்ள வாலாஜா ரோடு அம்மூர் ரயில் நிலையத்திற்கு சென்று அங்கு யாரும் கவனிக்காத நேரம் பார்த்து,


இன்று அதிகாலையில் சென்னை நோக்கி வந்த ஆலப்புழா ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து, ரயில்வே நிலையத்தில் இருந்த அதிகாரிகள் இது சம்பந்தமாக காட்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில்,

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல் நசுங்கி உயிரிழந்துள்ள செல்வராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜாப்பேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து காட்பாடி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கணவன்,

மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக ஆத்திரமடைந்த மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அம்மூர் பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.