கண்களை தோண்டி, நாக்கை அறுத்து 13 வயது சிறுமிக்கு அரங்கேறிய கொடூரம்.. நடந்தது என்ன?

617

லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் கரும்பு தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின்படி உடலை மீட்பு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் அந்த சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் தெரியவந்தது.

இதுகுறித்து விசாரணையில், அந்த சிறுமி வெள்ளிக்கிழமை மதியம் முதல் காணாமல் போய்விட்டார். அவரை பெற்றோர் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் அவரது உடல் கரும்பு காட்டில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

அந்த சிறுமியின் சடலம் கிடைக்கப் பெற்ற கரும்பு காடு, கைதான இருவரில் ஒருவருக்கு சொந்தமானது. இவர்கள் இருவர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வன்கொடுமை, கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த கொடூர சம்பவத்தால் நாடே அதிர்ச்சிக்குள்ளாகியது.


இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை கூறுகையில், எனது மகளின் கழுத்தை அவர் அணிந்திருந்த துப்பட்டாவை கொண்டு நெரித்துள்ளார்கள்.

அவரது கண்களை தோண்டி, நாக்கை அறுத்து மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் லக்னோவிலிருந்து 130 கிமீ தூரத்திற்கு அப்பால் அதாவது நேபாள எல்லைக்கு அருகே உள்ள கிராமத்தில் நடைபெற்றது என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.