கர்ப்பிணிக்கு வீட்டில் ஸ்கேன் செய்து கருக்கலைப்பு.. இறுதியில் நடந்த சோகம்!!

358

கிருஷ்ணகிரியில்..

கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டத்தில் கர்ப்பிணிகள் சிலர், இடைத்தரகர் மூலம் சட்டத்திற்கு புறம்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்கேன் சென்டரில் பாலினம் அறிந்து கொள்வதாக தகவல் வெளியானது. மேலும், பாலினம் பெண் என அறியும் கர்ப்பிணிகளுக்கு,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த கொசமேடு எம்.எஸ்.நகரில் வசிக்கும் உமாராணி என்பவர் கருக்கலைப்பு செய்து வருவதையும் மருத்துவக்குழுவினர் கண்டறிந்தனர்.இதனையடுத்து கடந்த 8ம் தேதி பர்கூர் வட்டார மருத்துவ அலுவலர் தாமரைசெல்வி தலைமையில்,

மருத்துவக்குழுவினர் கொசமேட்டில் உள்ள உமாராணி வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எந்தவித மருத்துவ படிப்பும் படிக்காமல், கர்ப்பிணி பெண்களுக்கு உமாராணி கருக்கலைப்பு செய்து வந்ததையும், இதற்காக ஒருவருக்கு ₹25 ஆயிரம் பணம் பெற்று வந்ததையும் கண்டறிந்தனர்.


இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த உமாராணியை தனிப்படை போலீசார், ஓசூரில் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.