கர்ப்பிணிப் பெண்ணை கொன்று உடலை எரித்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

433

கர்நாடக மாநிலத்தில்..

கர்நாடக மாநிலத்தில் கொப்பல் மாவட்டத்தின் புறநகர் கபூர் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த நேத்ராவதி என்று 26 வயது இளம்பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் திடீரென்று நேத்ராவதி வீட்டில் இருந்து மாயமாகி இருக்கிறார். இதனால் பதற்றம் அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடி உள்ளார்கள்.

நேத்ராவதி தனது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உயிர் பிரிந்த நிலையில் பிணமாக கிடந்திருக்கிறார். இதை பார்த்த குடும்பத்தினரும் கிராமத்தினரும் கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.


தகவல் அறிந்த கொப்பல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சென்று நேத்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் இது குறித்த நடத்திய விசாரணையில் நேத்ராவதியை கொலை செய்து பின்னர் உடலை எரித்தனர் என்பது தெரியவந்திருக்கிறது.

இந்த சம்பவத்தில் கொலையாளிகள் யார் என்பது உடனடியாக போலீசாரால் கண்டறிய முடியவில்லை. மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.

பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் போலீசார் மேற்கொண்டு விசாரணையை தீவிரப் படுத்த இருக்கின்றனர். இதற்குள் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகளை பிடிக்க போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.