கள்ளக்காதலிக்காக குடும்பத்தை அழிக்க திட்டம்.. குழந்தையை கொன்று நாடகமாடியவருக்கு இறுதியில் நேர்ந்த கதி!!

860

மகாராஷ்டிராவில்..

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தாராவி பகுதிக்கும் தமிழகத்துக்கும் எப்போதும் ஒருவித பிணைப்பு உண்டு, ஏனெனில் அங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் தமிழர்கள்தான் என்பதால். இந்த நிலையில் தாராவியில் வசித்துவரும் ரஹ்மத் அலி சவுக்த் அலி அன்சாரி என்பவர், ஜவுளி தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு தாஹிரா பானோ என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், அன்சாரிக்கு உறவுக்காரப் பெண் ஒருவருடன் கள்ள உறவு ஏற்பட்டது.

 

மூன்று ஆண்டுகளாக இந்த கள்ள உறவு நீடித்த நிலையில், அந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்பியுள்ளார். ஆனால், அந்த உறவுக்கார பெண்ணோ, மனைவியும் குழந்தையும் இருக்கக் கூடாது, நாம் சேர்ந்து வாழலாம் என கூறினார்.


எனவே, தனது மனைவி மற்றும் மகனை கொலை செய்து தீர்த்துகட்ட அன்சாரி முடிவு செய்தார். அதன்படி முதலில் தனது 2 வயது குழந்தையை வெளியே கூட்டி சென்று மைதிலி நதியில் மூழ்க வைத்து குழந்தையை கொடூரமாக கொலை செய்துள்ளார்.

குழந்தையின் சடலத்தை பிளாட்டிக் பையில் வைத்து நதியில் தூக்கி வீசியுள்ளார். பின்னர் குழந்தையை நான் பார்க்கவில்லை காணாமல் போய்விட்டான் என நாடகமாடியுள்ளார்.

 

இருப்பினும் மனைவி தஹீராவுக்கு கணவர் மீது சந்தேகம் எழவே போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தையை கொன்ற உண்மையை அன்சாரி ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.