கள்ளக்காதல்.. செக்ஸ் டார்ச்சர்.. தோழியின் உதவியுடன் சைக்கோ கணவனை தீர்த்துக்கட்டிய பெண்!!

1024

கடலூரில்..

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே T. பாளையம் கிராமப்பகுதியில் புற்றுகோவில் ஒன்று உள்ளது. இதன் அருகே கரும்பு தோட்டம் ஒன்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது.

இரு தினங்களுக்கு முன்பு கரும்பு தோட்டத்திற்கு வேலைக்கு சென்றவர்கள் அங்கு துர்நாற்றம் வீசுவதை அறிந்து அப்பகுதியில் பார்த்த போது, முகம் மற்றும் உடலின் பகுதிகள் சிதைந்து நிலையில் ஆண் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே குள்ளஞ்சாவடி போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? யார் கொலை செய்து இங்கு போட்டுவிட்டு சென்றனர்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் உயிரிழந்தவர் வடலூர் பார்வதிபுரத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பது தெரியவந்தது.


கூலித் தொழிலாளியான இவரது மனைவி மஞ்சுளாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. ராஜசேகருக்கும், மஞ்சுளாவுக்கும் திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜசேகருக்கு திருப்பூரைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருந்து வந்துள்ளது.

இதன் காரணமாக ராஜசேகர் அடிக்கடி திருப்பூர் மாவட்டத்திற்கு சென்று வந்துள்ளார்ராஜசேகர் தனது குடும்பத்திற்கு சரியான முறையில் பணம் வழங்காததால் மஞ்சுளா அவரது மூன்று பெண் குழந்தைகளுடன் அவதியடைந்து வந்துள்ளார்.

மேலும் தினமும் குடித்துவிட்டு வந்த மஞ்சுளாவிற்கு தொடர்ந்து பாலியல் டார்ச்சரும் கொடுத்து வந்ததுடன், ஒத்துழைக்க மறுத்தால் அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளார்.

இந்நிலையில் குடும்ப கஷ்டம் காரணமாக வேலைக்கு சென்று வந்த மஞ்சுளா தனது சூழ்நிலை குறித்து நெருங்கிய தோழி வினோதினி மற்றும் அவரது கணவர் சசிகுமாரிடம் தெரிவித்து கண்ணீர் விட்டு அழுந்துள்ளார் அப்போது தனது கணவரை கொலை செய்யும் முடிவுக்கு வந்த மஞ்சுளா, தனது தோழியுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார்.

திட்டத்தின்படி மஞ்சுளாவையும், அவரது கணவரையும், விருந்துக்கு வரும்படி, தோழி தனது வீட்டுக்கு அழைத்துள்ளார். அதன்படி அவரது வீட்டுக்குச் சென்ற இருவரும் உணவருந்தியுள்ளனர்.

விருந்துக்குபின், தோழியின் கணவர் சசிகுமார், தன்னிடம் வெளிநாட்டு மது உள்ளது என்று கூறி ராஜசேகரை தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.திட்டமிட்டபடி மதுவில் விஷம் கலந்து கொடக்க ராஜசேகர் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.

உடலை யாரும் பார்க்காத வகையில் அங்கிருந்த கரும்புத் தோட்டம் ஒன்றில் வீசி விட்டு சந்தேகம் வராத வகையில் குடும்பத்துடன் வினோதினி கொடைக்கானல் சுற்றுலா சென்றுவிட்டதாக விசாரணையின் போது மஞ்சுளா போலீசாரிடம் கூறியுள்ளார்.

உண்மை அம்பலமானதையடுத்து கொடைக்கானல் சென்ற வினோதினி, கணவர் சசிக்குமார், அவருடைய நண்பர் மோகன் உள்ளிட்டோரைப் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

அவர்கள் நான்கு பேரு மீதும் கொலை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். நட்புக்காக தோழியின் கணவரை கொலை செய்த உயிர்தோழி குடும்பத்துடன் சிறைச்சென்ற சம்பவம் கடலூரில் பரபரப்பு ஏற்படுத்திள்ளது .