கள்ளக்காதல்.. பலமுறை சொல்லியும் கேட்காத அக்கா : ஆத்திரத்தில் தம்பி செய்த செயல்!!

27109

ராமநாதபுரம்..

ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.காவனூர் பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மனைவி பாக்கியம் (51). இவருக்கு பவித்ரா (24) என்ற மகள் உள்ளார். இவருக்கும், உச்சிப்புளியை சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பவித்ரா தாய் வீட்டில் வசித்து வந்தார்.

தாயுடன் சேர்ந்து பவித்ரா செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்று வந்தார். அங்கு முருகானந்தம் (42) என்ற லாரி டிரைவருடன் பவித்ராவிற்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ராமநாதபுரத்தை சேர்ந்த ஒருவருடனும் பழக்கம் இருந்துள்ளது. இதனை தாய் பாக்கியம் கண்டும் காணாமல் இருந்தாராம்.

இதுகுறித்து அறிந்த ரவி தனது மகளையும், மனைவியையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தாயும், மகளும் சேர்ந்து குடிபோதையில் இருந்த ரவியை கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீ வைத்து எரித்துக்கொன்றனர்.


ரவி குடிபோதையில் தீ வைத்து கொண்டதாக பொய் சொல்லி நாடகம் ஆடினர். இதுகுறித்து ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கள்ளக்காதலன் முருகானந்தத்துடன் சேர்ந்து ரவியை கொலை செய்தது தெரியவந்தது.

இந்த கொலை தொர்பாக பாக்கியம், பவித்ரா, லாரி டிரைவர் முருகானந்தம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் சூழலில், பாக்கியமும், பவித்ராவும் ஜாமீனில் வெளியே வந்தனர். தனது பெரியப்பாவை கொன்றதால் இவர்கள் இருவர் மீதும் ரவியின் தம்பி முருகேசனின் மகனான மணிகண்டன் (23) என்பவர் ஆத்திரத்தில் இருந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை பவித்ரா வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த மணிகண்டன், பவித்ராவை கண்டித்துள்ளார். மேலும், வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் தான் கையில் வைத்திருந்த இரும்பு ராடால் அக்காள் பவித்ராவை சரமாரியாக தாக்கினார்.

இதில் படுகாயம் அடைந்த பவித்ரா ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ராமநாதபுரம் பஜார் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனை கைது செய்தனர். மேலும் பவித்ராவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.