காதலி விட்டுட்டு போயிட்டா.. கண்ணீர் வீடியோ வெளியிட்டு இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

546

உத்தரப்பிரதேச மாநிலத்தில் லோனி, காசியாபாத்தில் வசித்து வருபவர் 24 வயது பவன் குப்தா. இவர் மே 27ம் தேதி (செவ்வாய்க்கிழமை இரவு) தற்கொலை செய்து கொண்டார்.

இவர் தற்கொலை செய்யும் முன், 6 நிமிடம் 51 விநாடிகள் கொண்ட உணர்ச்சி மிகுந்த வீடியோவையும், 3 பக்கங்களில் தற்கொலை கடிதத்தையும் எழுதி வைத்திருந்தார். இச்சம்பவம் தற்போது சமூகவலைதளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பவன் குப்தா, ஒரு ஃபவுன்ட்ரியில் பணிபுரிந்து வருவதுடன் பான்தலா பகுதியில் வசித்து வந்தவர். அவர் தன்னுடைய மாமாவின் கட்டி முடிக்கப்படாத வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீசார் பவன் முன்பு டெல்லியில் ஒரு மருத்துவமனையில் வேலை செய்யும் ஒரு நர்சுடன் காதல் தொடர்பில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதற்குப் பிறகு, அந்த நர்ஸ் சர்பராஸ் மற்றும் சாஹில் என்ற இரு நபர்களுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்ததாகவும்,

அவர்கள் பவனை பிளாக்மெயில் செய்யத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. பவன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக எழுதிய கடிதத்தில், “நான் பவன் குமார்… என்னை பிளாக்மெயில் செய்கிறார்கள்.


அவர்களின் பெயர்கள் சர்பராஸ் மற்றும் சாஹில். இந்த உலகத்தில் நீதி இருந்தால், சர்பராஸ் கடுமையான தண்டனை பெற வேண்டும்.

உங்கள் மகன் என் நிலைமையில் இருந்தால், நீதி கிடைக்கும் அல்லவா என்றுஎழுதியுள்ளார். மேலும், “மகள்களை நீங்கள் காப்பாற்றுகிறீர்கள், இப்போது மகன்களையும் காப்பாற்றுங்கள்.

ஒரு ஆணின் அழுகையை யாரும் கேட்பதில்லை” என உணர்ச்சி மிக்க வரிகளையும் அவர் எழுதியுள்ளார்.

பவன் தனது கடிதத்தில், “நான் 112 க்கு அழைத்தேன், ஆனால் யாரும் பதில் அளிக்கவில்லை” இதுகு றித்து லோனி ஏசிபி சித்தார்த் கவுதம் “பவனின் தந்தை ராகேஷ் குமார் தகவல் வழங்கியதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பவன் எழுதிய கடிதம் மற்றும் வீடியோ முக்கிய ஆதாரங்களாக எடுக்கப்பட்டுள்ளன. சர்பராஸ் கைது செய்யப்பட்டுள்ளார், சாஹிலை தேடும் பணி தொடர்கிறது” என கூறியுள்ளார்.

இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி, ஆண்களின் மனஉளைச்சலையும், அவர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தத்தையும் பற்றி புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

“ஒரு ஆண் அழுகிறான் என்றால், அதை யாரும் கவனிக்க மாட்டார்களா?” என்ற பவனின் கேள்வி பல ஆண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.