மதுரை…

மதுரை ஞானஒளிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இளைஞர், ஜெப்ரி சால்ஸ். சென்னையிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2ஆம் ஆண்டு பயின்று வருகிறார்.

இவர் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண்னை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு இருவரது பெற்றோரும் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இருவரும் பழங்காநத்தம் பகுதியிலுள்ள தனியார் விடுதியில் நேற்று முன்தினம் தங்கிய நிலையில் நேற்று காலை இளைஞர் ஜெப்ரி சார்லஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து இளம்பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற சுப்ரமணியபுரம் போலீசார் இளைஞரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இளைஞர் சார்லஸ் தற்கொலை குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம்பெண்னுடன் ஒரே அறையில் இருந்தபோது இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதால் இளம்பெண்ணிடம் காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.















