காதலை ஏற்க மறுத்த இளம் பெண்ணிற்கு இளைஞனால் நடந்த விபரீதம்!!

1344

சேலம் மாவட்டம்..

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை இளைஞர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கெங்கவல்லி அருகே கூடமலை பகுதியை சேர்ந்த விவசாயி முருகேசன். இவரது இளைய மகள் ரோஜா ஆத்தூர் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் ஆத்தூரை சேர்ந்த சாமிதுரை என்பவர் ரோஜாவை ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் வரும் கல்லூரி பேருந்தை நிறுத்தி இளைஞர் அவரிடம் தகறாரில் ஈடுபட்டார். இதையடுத்து ரோஜாவின் தந்தை, இளைஞரின் உறவினர்களை அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தார். இந்நிலையில், ரோஜாவும் அவரது சகோதரி நந்தினியும், விவசாய தோட்டத்தில் வேலை செய்துகொண்டு இருந்தனர்.


அப்போது அங்கு வந்த இளைஞர் இளாம்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து ரோஜா மற்றும் நந்தினி மீது அவர் மண்ணெண்ணெயை ஊற்றினார். அப்போது இளம் பெண்ணின் சகோதரி தப்பி ஓடி உயிர்பிழைத்தார். இதனிடையே ரோஜா வயலில் கீழே விழுந்து உருண்டதில் உடல் முழுவது சேறானதால் இளைஞரால் தீ பற்ற வைக்க முடியாமல் போனது.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் அருகே இருந்த கல்லை தூக்கி அவரது முகத்தில் போட்டுவிட்டு தப்பி சென்றார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் ரோஜாவை கூடமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ரனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த கெங்கவல்லி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவான இளைஞரை தேடி வருகின்றனர்.