கார் லோன் எடுக்காமலே இ.எம்.ஐ கட்டும் பிரபல நடிகை.. இப்படியும் ஒரு நூதன மோசடி!!

667

நடிகை நிலானி..

இதயத்தைத் திருடாதே, தென்றல் உட்பட 13 டிவி தொடர்களில் நடித்துள்ளார் நிலானி. தெரு நாய்கள், காதலும் கடந்து போகும், நெருப்புடா, ஓம் உள்பட சில திரைப்படங்களிலும் சிறு வேடங்களில் இவர் நடித்துள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து போலீஸ் சீருடையில் வீடியோ வெளியிட்டு கைதானாவர் நடிகை நிலானி.

அதன் பிறகு குடும்ப பிரச்சனையில் சிக்கி சமூகவலைதளங்கள் மூலம் பிரபலமானார். தற்போது டிவி தொடர்களில் பிஸியாக நடித்து வரும் நிலானி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மோசடி புகார் ஒன்றை கொடுத்துள்ளார். கடன் வழங்கும் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி ஒருவர் நடிகை நிலானியிடம் பேசி உள்ளார்.


குறைந்த வட்டிக்கு கார் லோன் தருவதாகவும், அதனை ஆன்லைன் மூலமாக பெறலாம் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பி அவர் மாதந்தோறும் எவ்வளவு வட்டி செலுத்த வேண்டும் உள்பட பிற விவரங்களை கேட்ட போது, நிதி நிறுவன ஊழியர்,

முதலில் ஆன்லைனில் லாக் இன் பண்ணினால் தான் தெரியும் என கூறியுள்ளார். அதற்கு சம்மதித்த நடிகை நிலானி லாக் இன் செய்த பிறகு வட்டி தொகை அதிகமாக இருந்ததால் தனக்கு கார் லோன் வேண்டாம் என்று கூறி நிதி நிறுவன ஊழியரிடம் நிராகரித்து விட்டார்.

ஒரு மாதத்திற்கு பிறகு நடிகை நிலானிக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. உங்களது லோன் ரூ. 8.80 லட்சம் கிரெடிட் ஆகி விட்டதாகவும், அதற்கான வட்டி தொகை 10,998 ரூபாய் கட்டுங்கள் என்றும் வந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த நிலானி நிதி நிறுவன மேலாளரை தொடர்பு கொண்ட போது அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் நிலானி வங்கியிலிருந்து நிதி நிறுவனம் 10,998 ரூபாய் எடுத்துள்ளனர்.

கார் லோன் வாங்காமலேயே இது போன்ற நூதன மோசடியை நிதி நிறுவனம் செய்து வருவதாக நடிகை நிலானி குற்றம் சாட்டி உள்ளார். மோசடி செய்த நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்ககோரி நடிகை நிலானி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

நிதி நிறுவனத்தில் இருந்து பேசியவரின் ஆடியோ பதிவையும், வங்கி கணக்கு பரிவர்த்தனை ஆவணங்களையும் அவர் புகாருடன் இணைத்து கொடுத்துள்ளார்.