ஐஸ்வர்யா லட்சுமி..

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. லண்டனில் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அகதிகளை அந்த நாட்டில் இருந்து விரட்ட கேங்ஸ்டர் கும்பல் ஒன்று செயல்பட்டு வருகின்றது.

அவர்களுக்கு எதிராகவும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழர் போராடுகிறார். அவரும் அதே நாட்டைச் சேர்ந்த ஒரு கேங்ஸ்டர் கும்பலகை நிர்வகித்து வருகின்றார். இப்படி சென்று கொண்டிருந்த ஜகமே தந்திரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றுதான் கூறவேண்டும்.

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆக்சன் திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டது வாடிக்கை. அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.
















