குழந்தையோடு வாக்கிங் வந்த பெண் பாலியல் கொலை.. நாடகமாடிய வாலிபர்களை சுட்டுப் பிடித்த போலீஸ்!!

591

கர்நாடகாவில்..

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதி பண்ணார்கட்டா அருகேயுள்ள பேடராயனதொட்டியைச் சேர்ந்தவர் 38 வயதான முனிரத்னம்மா. அவரது தங்கை மகனான சிறுவனுடன் நேற்று முன்தினம் மாலை நடை பயிற்சி மேற்கொண்டார்.

வாக்கிங் சென்ற முனிரத்னம்மா, அதன் பின் வீடு திரும்பவில்லை. அதிர்ந்து போன உறவினர்கள் அப்பகுதியில் தேடிய போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த 3 வாலிபர்கள், காயங்களுடன் ஒரு சிறுவன் அந்த புதருக்குள் அழுது கொண்டிருந்ததாகவும்,

மேலும் அங்கு ஒரு பெண் கொலை செய்யப்பட்டு அரை நிர்வாணமாக இருப்பதாகவும் கூறி சிறுவனை குடும்பத்தாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதே போல அந்த மூன்று இளைஞர்களும் போலீசுக்கும் தகவல் தெரிவித்ததுடன் பத்திரிகைகளுக்கும் பேட்டி அளித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.


போலீசாருக்கு கிடைத்த சிசிடிவி காட்சிகளை வைத்து நடந்த விசாரணையில், புகார் அளித்த அந்ற மூன்று இளைஞர்களும், ஆள் நடமாட்டமே இல்லாத அந்த பகுதியில் தொடர்ந்து நடமாடி வந்ததை அடுத்து, சந்தேகத்தின் பேரில் அந்த மூன்று பேரிடமும் தனித்தனியே அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, ஒருவருக்கு ஒருவர் முரண்பட்ட தகவல்களை தெரிவிக்கவும் சந்தேகம் அதிகரித்து போலீசார் விசாரணையை தீவிர படுத்தியதில் மூன்று பேரும் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதுடன் உதவுவது போல நடித்த சோமு என்கிற சோமசேகர், ஹரிஷ், ஜெயந்த் ஆகிய மூன்று பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

பின்னர் சம்பவம் நடந்த இடத்திற்கு போலீசார் குற்றவாளிகளை அழைத்துச் சென்று சம்பவத்தை விவரிக்க கூறினர். அப்போது குற்றவாளிகளில் ஒருவரான சோமசேகர் என்பவர் போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றார்.

அப்போது போலீசார் எச்சரிக்கையையும் மீறி தப்பிய சோமசேகரை துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்தனர். இதில் காயமடைந்த சோமசேகர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.