கூசுதே… அன்பு ஆசிரம ஓனரின் மிட்நைட் அக்கப்போர்.. தப்புன்னு சொன்னேனே.. குமுறும் பெண்!!

4138

குற்றம் சாட்டப்பட்ட ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி குரங்கு கடித்ததால் காயம் அடைந்ததாக கூறி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்… அதேபோல் அவரது மனைவி மரியாஜூபின் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறி அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்…

இதனால் இவர்கள் 2 பேரையும் உடனடியாக கைது செய்ய முடியாமல் போனது.. இறுதியில் மரியாஜூபின் உட்பட பூபாலன், சதீஷ், தாஸ் ஆகிய 4 பேரும் கைதானார்கள்.. ஜூபின்பேபி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்..

நேற்றுமுன்தினம் போலீசார் மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது வார்டில் இருந்து வெளியே வந்த ஜூபின்பேபி அங்கிருந்த போலீசாரிடம், “முடிந்தால் என்னை கைது செய்யுங்கள், என் மீது எந்த தவறும் இல்லை” என்று கடுமையான வாக்குவாதம் செய்தார்.. பிறகு அவரை போலீசார் கைது செய்தனர்..

இப்போதைக்கு வழக்கில் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இவருக்கு இன்னும் சிகிச்சை நடக்கிறது.. இந்த சிகிச்சை முடிந்துவந்தால்தான், காணாமல் போன ஜாபருல்லா பற்றி தெரியவரும் என்கிறார்கள் போலீசார். பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர், முதியோர்கள், ஒரு ஆண் குழந்தை உள்பட 109 ஆண்கள், 33 பெண்கள் என்று மொத்தம் 142 பேர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்..

ஆசிரமத்தில் இன்னும் சிலர் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.. அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, ஆசிரமத்தை சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்கிறார்கள். இந்த ஆசிரமத்தின் இன்னொரு பிராஞ்ச் பெங்களூருவில் இயங்கி வரும்நிலையில்,

அங்கேயும் சிலர் மாயமாகி இருக்கிறார்களாம்.. ஆனால், பெங்களூரு ஆசிரமம் தரப்பில் இந்த தகவலை மறுத்து வருகிறார்கள்… இதனிடையே, விழுப்புரம் அன்பு ஆசிரமத்தில் தங்கியிருந்த வடமாநில பெண் ஒருவர், தான் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக வாக்குமூலம் தந்துள்ளார்..

அதில், “என் கணவரை விட்டுவிட்டு 8 வருடங்களுக்கு முன்பு தமிழகம் வந்துவிட்டேன். இங்கு ஊர் ஊராக சுற்றி திரிந்த போது, கடந்த 2019ம் ஆண்டு விழுப்புரம் வந்தேன். அப்போது அங்கு வந்த யாரோ ஒருவர் அடைக்கலமின்றி தனியாக இருப்பதை கவனித்து அன்பு ஜோதி ஆசிரமத்தில் விட்டு சென்றார்.

ஆசிரமத்தில் சமைக்கும் வேலைகளை செய்வேன்.. வேலை செய்ய தாமதமானால் ஆசிரமத்தின் ஓனர் ஜூபின் மற்றும் அவரது மனைவி மரியாவும், அங்கு வேலை செய்பவர்களுடன் சேர்ந்து என்னை தனி அறையில் பூட்டி வைத்து அடித்து துன்புறுத்துவார்கள்..

இப்படித்தான், கடந்த டிசம்பர் மாதம் 3ம் தேதி ஆசிரமத்தில் இருந்து புதுச்சேரிக்கு வலுக்கட்டாயமாக என்னை அழைத்து சென்றார் ஜூபின் பேபி.. நடுராத்திரி என்னை உடலுறவுக்கு கட்டாயப்படுத்தினார். நான் வேண்டாம், இது தப்பு என்று தெரிவித்தேன். ஆனால், அவர் எனது கன்னத்தில் மாறிமாறி முத்தங்கள் கொடுத்து என்னை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டு, பலாத்காரம் செய்தார்.

மறுநாள் குண்டலப்புலியூருக்கு அழைத்து வந்துவிட்டனர்., இது குறித்து என்னுடைய ஆசிரம தோழியிடம் சொன்னேன்.. அவரையும் 5 முறை ஜூபின் பேபி வன்கொடுமை செய்ததாக என்னிடம் சொன்னார்.. இதனால், நாங்கள் 2 பேரும் என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்தோம்.. அந்த நேரம் பார்த்து, ஜூபின் பேபி குடும்பத்தினருடன் ஊருக்கு சென்றிருந்தார்..

உடனே நாங்கள் 2 பேரும் அந்த நேரத்தை பயன்படுத்தி அங்கிருந்து தப்பி கோவைக்கு சென்றுவிட்டோம்.. ஆனால், ஊரில் இருந்து திரும்பிய ஜூபின் பேபி, எங்கள் 2 பேரையும் கண்டுபிடித்து மீண்டும் ஆசிரமத்திற்கே அழைத்து சென்றுவிட்டனர்.. நாங்கள் மறுபடியும் தப்பிக்காமல் இருக்கவே அவர்கள் வளர்க்கும் குரங்குகளை எங்கள் மீது ஏவி கடிக்கவிட்டனர்” என்றார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜூபின் பேபி மற்றும் அவரது மனைவி, மேலும் ஆசிரம பணியாளர்கள் என்று 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது.

இதனிடையே, 16 பேர் மாயமான சம்பவம் விஸ்வரூபமெடுத்துள்ளது.. இந்த ஆசிரமத்தில் குரங்குகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஆசிரமத்தில் இருந்தவர்களை குரங்குகள் கடித்து குதறி வருகிறது என்கிறார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குரங்குகளை வைத்து கொடூரம் செய்வதாகவும் தகவல் பரவுகிறது.

அப்படி குரங்குகளால் கடித்து தாக்கப்பட்டு அந்த 16 பேரும் உயிர் இழந்திருப்பார்களா என்ற சந்தேகம் கடந்த 2 நாட்களாகவே வட்டமடித்தது. ஆனால், இப்போது, அவர்கள் உடல் உறுப்புகளை திருடுவதற்காக கடத்தப்பட்டார்களா? என்ற அச்சமும் எழுந்து பரபரப்பை கிளப்பி வருகிறது.