
பிரபல நடிகர் சோனு சூட் ஊரடங்கின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்கும் வசதி உள்ளிட்ட பல உதவிகளை செய்து வந்தார்.

அண்மையில் தன் மகள்களை ஏரில் பூட்டில் உழுத ஆந்திர மாநில விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.

இதற்கெல்லாம் மேலாக தனது பிறந்தநாள் பரிசாக கொரோனாவால் வேலையிழந்த 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தர உள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

சோனி டிவி கபில் சர்மா தொகுத்து வழங்கும் பிரபல பாலிவுட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார் சோனு சூட்.

சோனி டிவி அந்த நிகழ்ச்சியின் சில நிமிட வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது.
அந்த வீடியோவில், சோனு சூட் மூலம் உதவி பெற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவருக்கு உருக்கமாக நன்றி தெரிவிக்க, இந்த வீடியோவை பார்த்த நடிகர் சோனு சூட் நிகழ்ச்சி மேடையிலேயே கண்கலங்கினார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.















