கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் பயங்கர தீ விபத்து.. 3 பேருந்துகள் முற்றிலும் எரிந்து சேதம்!

535

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேருந்துகள் முற்றிலும் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள,

நிலையில் அனைத்து பேருந்துகளும் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் 5 ஆம்னி பேருந்துகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன.

இதில், 3 பேருந்துகள் முற்றிலும் எரிந்து நாசமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை கட்டுப்படுத்தும் பணி தீவிரமாக ஈடுபட்டு தீயை அணைத்தனர்.