கோவில் குருக்களின் 19 வயது மகளை மணந்து கொண்ட 38 வயது எம்.எல்.ஏ! கட்டாய திருமணமா? மெளனம் கலைத்த புதுப்பெண்!!

670

கள்ளக்குறிச்சி……..

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு தன்னை கடத்தவில்லை எனவும், முழு சம்மதத்துடன் அவரை மணந்து கொண்டதாகவும் புதுப்பெண் செளந்தர்யா கூறியுள்ளார்.

தமிழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பிரபுவுக்கும், கோவில் குருக்கள் சுவாமிநாதன் என்பவரின் மகள் செளந்தர்யாவுக்கும் நேற்று முன் தினம் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் தனது மகளை பிரபு கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டதாகவும், மகளை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் கூறி அவரது தந்தை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

ஆட்கொணர்வு மனு மீது இன்று விசாரணை நடத்தப்படுமென சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த சூழலில் புதுப்பெண் செளந்தர்யா இந்த விவகாரத்தில் மெளனம் கலைத்துள்ளார்.


அவர் கூறுகையில், என்னை யாரும் கடத்தவில்லை, நானும் பிரபுவும் காதலித்தோம். ஆனால் என் குடும்பத்தார் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என்பதால் வீட்டை விட்டு வெளியேறினேன்.

நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன், ஏனென்றால் நான் என் இதயத்தைப் பின்பற்றி என் சொந்த எதிர்காலம் குறித்து நானே முடிவெடுத்தேன்.

என் குடும்பத்தாரை விரைவில் சமாதானப்படுத்த முடியும் என நம்புகிறேன். என்னை யாரும் மிரட்டவில்லை, என் முழு சம்மதத்துடன் தான் திருமணம் நடைபெற்றது என கூறியுள்ளார்.