சபரிமலைக்கு சென்ற கணவன்… அண்ணி செயலால் விரக்தியடைந்த கொழுந்தன் : அரங்கேறிய பயங்கரம்!!

1122

சென்னை…

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் நடந்த கொலை ஒன்று போலீசாரை திகைக்க வைத்துள்ளது. தற்போது சபரிமலை சீசன். இதையடுத்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தமிழர்கள் பலரும் மாலை போட்டு சென்று வருகின்றனர்.

சென்ற வருடத்தை விட இந்த வருடம் அதிக அளவில் மக்கள் சபரிமலை செல்கின்றனர். கொரோனா, குரங்கு அம்மை, டெங்கு போன்ற பல்வேறு காரணங்களால் கடந்த 3 வருடங்களாக சபரிமலை சீசன் டல் அடித்தது.

ஆனால் இந்த வருடம் சபரிமலை செல்லும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. இந்த நிலையில் கணவன் சபரிமலை சீசனுக்கு சென்றதை பயன்படுத்தி மனைவி தவறு செய்த சம்பவம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கொருக்குப்பேட்டை சீனிவாசபுரம் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொருக்குப்பேட்டை சீனிவாசபுரம் பகுதியில் வசித்து வருபவர் பிரபாவதி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவருக்கும் சில வருடங்கள் முன் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் சந்தோஷமாகவே வாழ்ந்து வந்துள்ளனர்.

தொடக்கத்தில் இவர்கள் சந்தோசமாக வாழ்ந்து வந்தாலும் போக போக இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இவர்களுக்குள் பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது.

இந்த கருத்து வேறுபாடு முற்றி அவ்வப்போது அது அடிதடி சண்டையாக மாறி உள்ளது. முக்கியமாக பிரபாவதி சில ஆண்களுடன் நெருக்கமாக பேசுவதை கணேசன் கடுமையாக கண்டித்து சண்டைக்கு சென்றுள்ளார்.

மனைவியை போட்டு அடிப்பது, சாப்பாட்டை வீசி எறிவது, வீட்டு ரிமோட்டை வீசி எறிவது என்று மிக கொடூரமாக கணேசன் நடக்க தொடங்கி உள்ளார். இருந்தாலும் சண்டை முடிந்து மனைவியிடம் சமாதானம் ஆகி அவரிடம் இயல்பாக பேசுவதை வழக்கமாக வைத்து இருந்திருக்கிறார்.

ஆனால் பிரபாவதி தொடர்ந்து வேறு ஆண்களுடன் தொடர்பில் இருப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து உள்ளார். இந்த நிலையில்தான் கணேசன் சமீபத்தில் சபரிமலைக்கு மாலை போட்டுள்ளார்.

மாலை போட்டு விரதம் இருந்தவர் சமீபத்தில் சபரிமலைக்கு சென்றுள்ளார். சபரிமலைக்கு சென்றவர் இன்னும் திரும்பவில்லை. இந்த நிலையில் கணவன் சபரிமலைக்கு போனதை பயன்படுத்திக்கொண்டு பிரபாவதி தனது காதலன் மணிகண்டன் என்பவரை வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.

தினமும் இரவு மணிகண்டனை பிரபாவதி வீட்டிற்கு வர வைத்து அவருடன் சந்தோசமாக இருந்துள்ளார். இவர்களின் வீட்டிற்கு பக்கத்து தெருவில்தான் கணேசனின் தம்பியும் பிரபாவதியின் கொழுந்தருமான தங்கவேலு வசித்து வந்துள்ளார்.

மணிகண்டன் இரவில் இப்படி பிரபாவதி வீட்டிற்குள் சென்றுவிட்டு வருவதை ஒருநாள் தங்கவேலு கவனித்து உள்ளார். மறுநாளே இவர்கள் வீட்டில் நெருக்கமாக இருந்ததையும் தங்கவேலு பார்த்துள்ளார்.

அண்ணன் சபரிமலைக்கு சென்ற இடைவெளியில் அண்ணி இப்படி செய்வதை பார்த்து தங்கவேலு கொதித்து போய் உள்ளார். இதையடுத்து வீட்டிற்குள் போய் பிரபாதியை அடித்தவர், அங்கேயே மணிகண்டனை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் தலையில் மணிகண்டனுக்கு மோசமாக காயம் ஏற்பட்டு உள்ளது.

தலையில் ரத்தம் வடிய வடிய மணிகண்டன் படுத்துகிடக்க பிரபாவதியுடன் தங்கவேலு சண்டை போட்டுள்ளார். இந்த கேப்பில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். இதையடுத்து விவரம் அறிந்த போலீசார் மணிகண்டன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு தங்கவேலுவை கைது செய்தனர்.