“சரி என்ன எவ்ளோ லவ் பண்ற.. சின்சியரா பண்றியா”.. போலீஸ்காரருடன் ரொமாண்ட்டிக்.. வெளியான ஆடியோவால் பரபரப்பு!!

6327

காஞ்சிபுரம்..

காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அருகே ஊராட்சி வார்டு உறுப்பினரும், திமுக வார்டு செயலாளராகவும் இருந்த சதீஷ் என்பவர், கடந்த சில மாதங்களுக்கு முன் முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டவர் யோகேஸ்வரி.. இவருக்கு எஸ்தர் என்று இன்னொரு பெயரும் உண்டு. இவர்தான் சதீஷை கொன்றவர்..

சதீஷூக்கு 30 வயதாகிறது.. திமுக வார்டு செயலாளராக இருந்தார் சதீஷ்,., லோகேஸ்வரி விபச்சாரம் உள்ளிட்ட கள்ளச்சாராய வியாபாரத்தை நடத்தி வருபவர்.. 24 மணி நேரமும் லோகேஸ்வரியிடம் மதுபானங்கள் விற்பனையாகுமாம்.


கடையடைப்பு, டாஸ்மாக் விடுமுறை நாட்களில், 3 மடங்கு விலையை உயர்த்தி மது விற்பனை செய்வாராம். லோகேஸ்வரி விற்கும் கள்ளச்சாராயத்தினால், அந்த பகுதி இளைஞர்கள் பலர் மதுவுக்கு அடிமையாகியும் வந்துள்ளது, சதீஷுக்கு கூடுதல் ஆத்திரத்தை தந்துள்ளது..

இயல்பாகவே, சமூக அக்கறை உள்ள இளைஞர் சதீஷ்.. தவறு எங்கு நடந்தாலும் தட்டிக்கேட்கும் துணிச்சலுடையவர்.. சில சமூக விரோத செயல்கள் குறித்து போலீசாருக்கும் அவ்வப்போது சதீஷ் தகவல் கொடுத்து வந்ததாக தெரிகிறது.

கடைசியாக அவர் தந்த தகவல்களினால் போலீஸார் நடவடிக்கை எடுத்துவிட்டதால், தினமும் வரக்கூடிய ஆயிரக்கணக்கான மாமூல் பணம் லோகேஸ்வரிக்கு தடைபட்டுள்ளது. இதனால் ஆவேசமடைந்த லோகேஸ்வரி, சதீஷை நயவஞ்சமாக பேசி தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்து கொன்றுவிட்டார்.

மிகப்பெரிய அரிவாளை எடுத்து, சதீஷின் தலையை துண்டாக வெட்டிவிட்டு, அந்த தலையை வீட்டின் வாசலில் கேட்டிற்கு வெளியே கொண்டு வந்து போட்டுவிட்டு, வீட்டையும் பூட்டி தலைமறைவானார். இதற்கு பிறகுதான் போலீசார் லோகேஸ்வரியை கைது செய்தனர்.

குன்றத்தூரை சேர்ந்த இந்த லோகேஸ்வரி, திமுக முன்னாள் ஒன்றிய பிரதிநிதி ஆவார் என்பது கூடுதல் தகவலாகும்.. இப்போது லோகேஸ்வரி ஜாமீனில் உள்ளார்.. இவரது ஒரு ஆடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது..

சோமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவருடன் லோகேஸ்வரி அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.. உளவுப் பிரிவை சேர்ந்த அந்த எஸ்ஐ-யின் பெயர் மாதவன். இவருடன் லோகேஸ்வரி காதல் ரசம் சொட்ட பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில், கொலை, வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரௌடி சச்சினை யாராலும் பிடிக்க முடியாது என்று மாதவன் பேசுவதும், மாதவனுடன் எஸ்தர் கொஞ்சி பேசுவதும் இடம்பெற்றுள்ளது.

லோகேஸ்வரி மாதவனிடம் பேசும்போது, “என்னைக்காவது அந்த ரவுடி சச்சின் பிடிபட்டுதான் ஆவான்.. சின்னாபின்னமாயிடுவான்.. கண்ணன்கிட்ட மாட்டினான்னா முடிஞ்சு போச்சு அவன் சோலி.

எப்படியாப்பட்டவங்களையும் பிடிப்பாரு அவர்.. என் உயிர் மாதிரி அவர்.. ஏன்னா இவன் சின்ன பையன்.. இவன் டீடெயில் அவருக்கு இன்னும் தெரியல என்கிறார் லோகேஸ்வரி.

அதற்கு மாதவன், “அப்படி சொல்லாதே.. இவனை பிடிக்கவே முடியாது.. உனக்கு தெரியாது..ப்பா.. யாருக்கும் அனுபவம் இல்லைன்னு சொல்லிட முடியாது. சில பேருக்கு சில டேலண்ட்கள் இருக்கும். நித்தியானந்தாவை இப்போ வரைக்கும் யாராவது பிடிக்க முடிஞ்சுதா? இத்தனைக்கும் ஒரு சாதாரண சாமியார்தானே” என்கிறார் மாதவன்.

உடனே லோகேஸ்வரி, அடடே நித்தியானந்தாவுக்கு சர்டிபிகேட் நீ தர்றே.. சரி, அதைவிடு.. என்னை நீ எவ்ளோ என்னை லவ் பண்றே சொல்லு? எவ்ளோ லவ் பண்றே? என்னை உனக்கு பிடிக்குமா? பிடிக்காதா? இப்போ உன் நினைப்புல நான் வந்துட்டேனா.

சொல்லு வந்துட்டேன்னு சொல்லு என்று ரொமாண்ட்டிக்காக லோகேஸ்வரி பேசியுள்ளார்.. உளவுத்துறையில் வேலை பார்க்கும் போலீஸ்காரரிடம், பெண் தாதா ஆபாசமாக பேசும் இந்த வீடியோதான் இணையத்தில் ஷேராகி வருகிறது.