சினிமாவுல கூட இப்படி பார்க்கல.. கணவருடன் ரொமான்ஸ் பண்ணும் நயன்.. வைரலாகும் புகைப்படம்!!

307

நயன்தாரா..

தமிழ் சினிமாவின் இளம் ஹிட் இயக்குனரான அட்லீ ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் ஹிட் திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்றார். தற்போது பாலிவுட் நட்சத்திர நடிகரான ஷாருக்கானை வைத்து ஜாவான் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நயன்தாரா, ‘காதல் மட்டும் தான்’ என்று குறிப்பிட்டு தனது கணவர் விக்னேஷ் சிவன் உடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியா பகிர்ந்துள்ளார்.