தமிழகத்தில்..

அச்சன்புதூர் பகுதியை சேர்ந்த செய்யது மசூது என்பவர் தனது நண்பர்களுடன் அடவிநயினார் கோவில் அணைப்பகுதியில் குளிக்க சென்றபோது தண்ணீரின் வேகம் காரணமாக இழுத்து செல்லப்பட்டார்.

அப்போது செய்யது மசூது பாறை ஒன்றில் சிக்கி கொண்டார். எவ்வளவு போராடியும் அவரால் மீள முடியாததால் நீரில் மூச்சுத்திணறி இறந்துள்ளார். உடன் இருந்த நண்பர்களாலும் அவரை மீட்க முடியவில்லை.

இதனைத்தொடர்ந்து செங்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் விரைந்த வந்த தீயணைப்பு வீரர்கள் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து அச்சன்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அடவிநயினார் கோவில் அணைப்பகுதியில் இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து நடந்து வருவதால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.















