சுவிஸில் கோர சம்பவம்… குற்றுயிராக மீட்கப்பட்ட 5 வயது குழந்தை: தாயார் மரணம்!!

435

சுவிட்சர்லாந்தின்……

சுவிட்சர்லாந்தின் ஃப்ரிபோர்க் மண்டலத்தில் காருடன் வேன் ஒன்று நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளம் தாயார் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

ஃப்ரிபோர்க் மண்டலத்தில் வெள்ளிக்கிழமை மாலை நேரம் சுமார் 5 மணியளவில் குறித்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

39 வயதான தாயார் ஒருவர் தமது 5 வயது குழந்தையுடன் சார்மி பகுதியில் இருந்து Châtel-sur-Montsalvens பகுதிக்கு தமது காரில் சென்று கொண்டிருந்தார்.

ஆனால் இவரது வாகனம் எதிர்பாராத வகையில் வலப்பக்கம் புகுந்து எதிர் திசையில் பயணப்பட, எதிரே வந்த டெலிவரி வேன் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.


தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், காருக்குள் சிக்கியிருந்த அந்த தாயாரை மீட்டு முதலுதவி அளித்துள்ளனர்.

ஆனால் அவர் சிறிது நேரத்தில் மரணமடைந்ததாக கூறப்படுகிறது. பின் இருக்கையில் இருந்த 5 வயது குழந்தை காயங்களுடன் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் ஹெலிகொப்டரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விபத்தில் டெலிவரி வேன் சாரதியும் அவருடன் பயணித்த 60 வயது நபரும் லேசான காயங்களுடன் தப்பியதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.