டச் பண்ணாதீங்க.. புத்தி தடுமாறிய நாகமலை வசந்தி.. ரோட்டில் பட்ட அசிங்கம்.. இப்ப மொத்தமா போயிடுச்சே!!

1565

நாகமலை வசந்தி…

நாகமலை வசந்தி என்றால் ரொம்ப ஃபேமஸ்.. நாகமலை புதுக்கோட்டை ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர்.. ஆரம்பத்தில் சின்சியராகத்தான் வேலை பார்த்து வந்தார்…

திடீரென பணத்தின் மீது மோகம் அதிகமாகிவிட்டது.. அதனால், அட்ராசிட்டியில் இறங்கிவிட்டார்.. சின்ன சின்ன குற்றங்களில் ஆரம்பித்து, வழிப்பறி, கொலை மிரட்டல் வரை வந்துவிட்டார்..

அப்பாவிகள் யாராவது சாலையில் பணம் கொண்டு போனால், அவர்களை வழிமறித்து, விசாரணை என்ற பெயரில் பணத்தை பறித்து வந்துள்ளார்.. பாதிக்கப்பட்டவர்கள் பயந்துகொண்டு, புகார் தருவதில்லை.. அதனால் வசந்தியும் எஸ்கேப் ஆகி வந்தார்..


கடந்த 2021-ல் அர்ஷத் என்பவர் மூலம் தான் வசந்திக்கு சிக்கல் வந்தது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் இந்த அர்ஷத்.. கைப்பை தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். தனியாக தொழில் தொடங்க ஆசைப்பட்டு, புதுக்கோட்டையில் உள்ள பாண்டி என்ற நண்பரிடம் கடன் கேட்டுள்ளார்..

அதற்கு பாண்டி, 10 லட்சம் ரூபாய் எடுத்து வா, அதை, இரட்டிப்பு செய்து தருகிறேன் என்று ஆசைக்காட்டி வரவழைத்துள்ளார்.. இது தெரியாமல் அர்ஷத், ஒரு பையில் 10 லட்சம் வைத்துக்கொண்டு, நாகமலை புதுக்கோட்டைக்கு சென்றுள்ளார்..

அதற்குள் பாண்டி, வசந்திக்கு போனை போட்டு, 10 லட்சத்துடன் அர்ஷத் என்பவர் வந்திருக்கும் விஷயத்தை சொல்லவும், வசந்தியும், ஸ்பாட்டுக்கு வந்து, அர்ஷத்தை மடக்கிவிட்டார்.. விசாரிக்க வேண்டும் என்று சொல்லி ஜீப்பில் ஏற்றிக்கொண்டு, ரூ.10 லட்சத்தையும் பறித்துக்கொண்டு, அர்ஷத்தை கீழே இறக்கிவிட்டாராம் வசந்தி..

இதனால் அதிர்ச்சி அடைந்த அர்ஷத், தன்னுடைய பணத்தை திரும்பி தருமாறு கேட்டுள்ளார்.. அதற்கு வசந்தி “பணமா? எங்கே இருந்தது? என் பிள்ளை சத்தியமா உன்கிட்ட இருந்த பையில் ஸ்கூல் நோட்டு புக்தான் இருந்தது… பணமே இல்லையே.. இப்படியே நச்சரித்தால் கஞ்சா கேஸ் போட்டு உள்ளே தள்ளிருவேன்” என்று மிரட்டி உள்ளார்..

இதனால் செய்வதறியாது விழித்த அர்ஷத் மாவட்ட எஸ்பி வரை புகார் கொண்டுபோனார்.. எஸ்பி உத்தரவிட்டதன் பேரில், இந்த வழக்கை போலீசார் துரிதமோக கையிலெடுத்தனர்.. இதற்காகவே தனி டீம் களமிறக்கப்பட்டது.. உடனடியாக வசந்தியை சஸ்பெண்ட் செய்தனர்.,

ஆனால், அதற்குள் வசந்தி எஸ்கேப் ஆகிவிட்டார்.. பல்வேறு தேடுதல் முயற்சிகளுக்கு பிறகு, வசந்தி கைதானார்.. பின்னர் நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்று வழக்கை எதிர்கொண்டார். இந்நிலையில், வசந்தி தன்னுடைய வழக்கு தொடர்பான சாட்சிகளை மிரட்டியதாக அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மேலும், இது தொடர்பாக மிரட்டுக்குள்ளான நபர் மதுரை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளிக்கவும், அதன்பேரில் அவர் மீது வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது. தென் மண்டல ஐஜி அஸ்ராக கார்க் ஆலோசனையின் பேரில், இந்த வழக்கை அவரை கைது செய்ய திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி சபரிநாதன் தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது.