தகாத உறவு.. ஓட ஓட விரட்டி இளைஞர் வெட்டிக் கொலை.. அதிர்ச்சி சம்பவம!!

672

நாமக்கல்…

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே அக்கலாம்பட்டியை சேர்ந்தவர் சீனு (23). இவர், படித்துவிட்டு பணிக்கு விண்ணப்பித்து காத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சீனுவுக்கு பக்கத்து வீட்டு நபரின் மனைவியுடன் கடந்த 2 ஆண்டுகளாக தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அப்பென்ணுக்கும், அவரின் கணவருக்கும் தகராறு அடிக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் சீனு உடனான உறவு குறித்து அப்பெண் தனது சகோதரி மகன் பிரவீன்குமாரிடம் தெரிவித்து வருத்தம் அடைந்துள்ளார்.

இதனால் பிரவீன் சீனுவை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கோவை விமான நிலைய பணிக்கு சீனுவுக்கு அழைப்பு வந்துள்ளது. எங்கே தனது தாய்மாமனின் மனைவியை உடன் அழைத்துச் சென்றுவிடுவானோ? என்ற பயத்தில் இருந்த பிரவீன் நேற்று இரவு 1 மணி அளவில் மது போதையில் சீனுவின் வீட்டுக்கு சென்றுள்ளார்.


பின்னர், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சீனுவை மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரவீன்குமார் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சீனு ரத்தம் சொட்ட சொட்ட தன்னை காப்பாற்றுமாறு கதறி துடித்தபடி அப்பெண்ணின் வீட்டை நோக்கி ஓடியுள்ளார். ஆனாலும் பாதி வழியிலேயே சீனு ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக கீழே விழுந்து உயிரிழந்தார்.

இதுபற்றி தகவலறிந்து வேலக்கவுண்டன்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சீனுவின் உடலை கைப்பற்றி உடல் கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகாத உறவால் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.