தண்டவாளத்தில் ரொமான்ஸ் செய்த காதல் ஜோடிக்கு நேர்ந்த விபரீதம்!!

6068

கடலூர்…

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அலெக்ஸ் என்பவரும், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஷெர்லின் என்ற பெண்ணும் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி இரவு வேளையில் ரயில்வே பாதை அருகில், அமர்ந்து பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

வழக்கம் போல் நேற்று நள்ளிரவிலும் அலெக்ஸ், ஷெர்லின் இருவரும் ரயில்வே பாதை அருகே அமர்ந்து தங்களையும் மறந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர்.


அப்போது அங்கு திடீரென்று வந்த ரயில் நொடி பொழுதில் அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் மோதி காதல் ஜோடி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.