தந்தையின் சகோதரியை சுட்டுக்கொன்ற 9 வயது சிறுவன்; ஆணவக் கொலைக்காக சுடுவதற்கு பயிற்சியளித்த குடும்பத்தினர்.!!

616

பாகிஸ்தான்……

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள ஒரு கிராமத்தில் குடும்பத்தினரின் உத்தரவுக்கமைய, தனது தந்தையின் சகோதரியை 9 வயதான சிறுவன் சுட்டுக்கொலை செய்துள்ளான்.

லாகூரிலிருந்த 200 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கிராமம் ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுது.

 

தனது அத்தையை கொல்வதற்காக சிறுவனுக்கு அவரது குடும்பத்தார் துப்பாக்கியை இயக்கும் பயிற்சியை வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தின் உயிரிழந்த 30 வயதான பெண், 10 வருடங்களுக்கு முன்னர், குடும்பத்தாரின் எதிர்ப்பை மீறி தான் காதலித்தை நபரை திருமணம் செய்திருந்தார். எனினும், பின்னர் பெண்ணின் குடும்பத்தார் அவருடன் சமாதானமாகியிருந்தனர்.


இந்நிலையில், மூன்று பிள்ளைகளுக்கு தாயான இப்பெண் அண்மையில் வைபவம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக தனது தாய்மாமன் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அவ்வைபவத்தின்போதே, 9 வயதான தனது மருமகனால் அப்பெண் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்றும், சம்பவத்தின் பின் சிறுவனுடன் அவனது குடும்பத்தினர் அங்கிருந்த தப்பிச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது ஒரு கௌரவக் கொலையாக கருதுவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மனித உரிமைகள் கண்காணிப்பின் அறிக்கைக்கு அமைய, பாகிஸ்தானில வருடாந்தம் 1,000 இற்;கும் அதிகமான பெண்கள் கௌரவக் கொரலை என்ற பெயரில் கொலை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.