தனியாக இருந்த இளம் விமானப் பணிப்பெண் கழுத்தறுத்து கொலை.. நடந்தது என்ன?

452

மகாராஷ்டிராவில்..

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அந்தேரியின் புறநகர் பகுதியில் வசித்து வந்தவர் ரூபல் ஓக்ரே. சத்தீஸ்கரைச் சேர்ந்த விமானப் பணிப்பெண்ணான இவர், Air India நிறுவனத்தில் பயிற்சி பெறுவதற்காக ஏப்ரல் மாதம் மும்பைக்கு மாறியுள்ளார்.

இந்த நிலையில் தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியாக இருந்த ரூபல் கழுத்து அறுபட்டு இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து அவரது உடலைக் கைப்பற்றினர்.

இதனையடுத்து விக்ரம் அத்வால் (40) என்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து துணை பொலிஸ் கமிஷனர் கூறும்போது, ‘தனியார் வீட்டு பராமரிப்பு நிறுவனத்தில் தூய்மைப் பணியாளராக பணிபுரியும் ஒரு குற்றவாளியை தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்துள்ளோம்.


கொலைக்கான காரணம் மற்றும் கூடுதல் விவரங்களை பெற அவரிடம் மேலும் நடத்தி வருகிறோம்’ என்றார். இளம்பெண்ணொருவர் வீட்டில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.