தன்னுடன் சேர விடாததால் கள்ளக் காதலியின் கணவரை பிளான் பண்ணி சம்பவம் செய்த நபர்!!

918

திருச்சியில்..

திருச்சியில் காந்தி மார்க்கெட்டைச் சேர்ந்தவர் கணேசன். இவரின் மனைவி சுசீலா. இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கட்டிட தொழிலாளியான கணேஷ் மனைவி குழந்தைகளுடன் திருப்பூரில் தங்கி இருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்திருக்கிறார்.

தஞ்சாவூரைச் சேர்ந்த பாலாஜி என்பவரும் இவருடன் கட்டிட வேலைக்கு வந்திருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கத்தில் அவ்வப்போது கணேஷ் வீட்டுக்கு வந்து சென்று இருக்கிறார் பாலாஜி .

அப்போது கணேசின் மனைவி சுசிலாவுக்கும் பாலாஜிக்கும் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது . பின்னர் இது கள்ள உறவாக மாறி இருக்கிறது. இதனால் சுசிலா கனவனை விட்டு பிரிந்து வீட்டை விட்டு வெளியேறி திருப்பூரிலேயே பாலாஜி உடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்திருக்கிறார். மனைவி காணவில்லை என்று திருப்பூர் காவல் நிலையத்தில் கணேஷ் புகார் அளித்திருக்கிறார்.


இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுசிலாவை மீட்ட போலீசார், பாலாஜியை எச்சரித்து சுசிலாவை அவரின் கணவர் கணேசன் உடன் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

அதன் பின்னர் கணேஷ் குழந்தைகளுடன் சுசிலா செஞ்சேரி பகுதியில் குடி இருந்து வந்திருக்கிறார் . கடந்த சில தினங்களாக அன்னூர் ஸ்ரீ நகரில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்திருக்கிறார்கள்.

அப்போது கணேஷ் தன் மனைவி சுசிலா இரண்டு குழந்தைகளுடன் அன்னூர் பேருந்து நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அங்கே மறைந்து நின்ற பாலாஜி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஓடி வந்து கணேசனை பலமாக குத்தி இருக்கிறார்.

இந்த தா.க்.கு.த.லி.ல் ப.டு.கா.ய.ம் அடைந்த கணேசனை அன்னூர் போலீசார் மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சுசிலாவின் கள்ளக்காதலன் பாலாஜியை கைது செய்துள்ளனர். அன்னூர் போலீசார் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.